Siragadikka aasai September 5 : ரோகிணி சொன்ன பொய் நம்புற மாதிரியே இல்லையே.. இன்றைய சிறகடிக்க ஆசையில்..
Siragadikka Aasai today : மனோஜுக்கு சர்ப்ரைஸ் செய்வதற்காகத்தான் ரோகிணி சொல்லாமல் போனதாக சொல்லி சமாளித்ததை மனோஜ் நம்புகிறானா? இல்லையா ? இன்றைய சிறகடிக்க ஆசையில்..
Siragadikka Aasai serial September 5 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனாவை சமாதானம் செய்வதற்காக வெள்ளை கொடியுடன் வீட்டுக்கு வருகிறான். கோபமாக இருக்கும் மீனா "சவாரி வரவங்க கிட்ட எல்லாம் என்னை பேய் என சொல்லி வைச்சு இருக்கீங்களா?" என கத்த "கஸ்டமர் கிட்ட ஜாலியா பேசினா தான் அவங்க அடுத்த முறையும் என்னையே கூப்பிடுவாங்க அதுக்காக தான் மீனா. நல்லா சவாரி போனா தானே சீக்கிரம் ரூம் கட்ட முடியும், இந்த அல்வாவும் வாங்க முடியும்" என சொல்லி ஐஸ் வைக்க மீனா கூலாகிறாள். இருவரும் சேர்ந்து சந்தோஷமாக சாப்பிடுகிறார்கள்.
ரோகிணி மனோஜை எப்படி சமாளிப்பது என யோசித்து கொண்டே வீட்டுக்கு வருகிறாள். மனோஜ் ரோகிணி வந்ததும் "எங்க போன நீ? என் கிட்ட எதையாவது மறைக்குறியா? அந்த போட்டியில் கூட ஏதாவது மறைச்சாதான் சண்டை இல்லாமல் இருப்பாங்கன்னு சொன்னாங்களே. நீ எதையாவது என்கிட்டே மறைச்சு வைச்சு இருக்கியா?" என கோபப்படுகிறான் மனோஜ் .
"ரோகிணி : அப்போ நீ என்னை சந்தேகப்படுறியா? உனக்காக தாம்பரம் பக்கத்துல இருக்க ஒரு கிராமத்துல இருக்குற சாமியாரை பார்த்து இந்த கருங்காலி மாலையை பூஜை பண்ணி வாங்கி வந்தேன். உனக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம் என நினச்சேன். உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைன்னா இரு அந்த சாமியாருக்கு போன் பண்ணி கொடுக்குறேன் என சொல்லி வித்யாவுக்கு போன் பண்ணி ஏமாத்துகிறாள்" ரோகிணி. முதலில் ரோகிணி பேசுவதை நம்பாமல் இருந்த மனோஜ் பிறகு அவளை நம்புகிறான்.
வித்யா ரோகிணி போன் செய்து என்ன நடந்தது என விசாரிக்க "உன்னால நான் இன்னிக்கு மனோஜ் கிட்ட மாட்டி இருப்பேன். உன்னை யார் ஷோ ரூமுக்கு வர சொன்னா? என திட்டுகிறாள்.
அடுத்த நாள் காலை மனோஜ் பூஜை செய்து அந்த கருங்காலி மாலையை போட்டு கொள்ள முத்து அவனை கிண்டல் செய்கிறான். அப்போது ஊரில் இருந்து நாச்சியார் அம்மா நாலு மூட்டை பச்சை வேர்க்கடலையை அனுப்பி வைத்து இருக்கிறார். அதை யார் யார் எப்படி பங்கு போட்டு கொள்வது என அனைவரும் பேசி கொள்கிறார்கள். அப்போது மீனா அண்ணாமலையிடம் நானும் கொஞ்சம் கடலை எடுத்துக்குறேன். கிரிஷுக்கு ரொம்ப பிடிக்கும். நான் வேலையை முடிச்சதும் நாம போயிட்டு வந்துடலாம்" என மீனா முத்துவிடம் சொல்ல அதை கேட்டு ரோகிணி டென்ஷனாகிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.