மேலும் அறிய
Advertisement
Siragadikka Aasai serial August 16 : மனோஜ் சொன்னதை கேட்டு ஜர்க்கான ரோகினி... முத்து போட்ட பிளான் தப்பா போச்சே.. மீனாவின் பதிலடி
Siragadikka Aasai today : மனோஜ் ரோகினியை புகழ்ந்து தள்ள ரவி ஸ்ருதிக்கு இடையே பிரச்சினை வெடிக்கிறது. மீனா முத்து போட்ட புது பிளான் ஒர்க் அவுட் ஆனதா? இன்றைய சிறகடிக்க ஆசையில் என்ன நடக்கிறது.
Siragadikka Aasai serial August 16 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 16 ) எபிசோட்டில் மனோஜ் ரோகிணியிடம் பேசிக் கொண்டு இருக்கிறான்.
"மனோஜ்: கல்யாணத்துக்கு முன் நான் ஒரு பொண்ணோட ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் எனத் தெரிந்து கூட என்ன நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட. நான் பண்ண சின்ன சின்ன தப்பெல்லாம் கூட மன்னிச்சு என்னை ஏத்துகிட்ட. இன்னைக்கு நான் பிசினஸ் பண்ண காரணம் நீதான். அப்பா பணத்துல ஸ்டார்ட் பண்ணி இருந்தாலும் ஜீவா கிட்ட இருந்து அந்த பணத்தை வாங்க நீதானா ஐடியா பண்ண. என்னோட லைஃப்ல நடந்த எல்லா விஷயத்துக்கும் நீதான் காரணம். அதனால நீதான் என்னோட பெஸ்ட் வைஃப் . நான் உன்னுடைய பெஸ்ட் ஹஸ்பண்டா?
ரோகிணி : அதில் என்ன சந்தேகம்? நீதான் பெஸ்ட் ஹஸ்பண்ட்" என ரோகிணி சொல்கிறாள்.
"மனோஜ் : நம்ம ரெண்டு பேரும் பெஸ்ட் கபுள் . அப்புறம் ஏன் நம்ம அந்த போட்டியில் வின் பண்ணல?
ரோகிணி : நான் உன்கிட்ட ஏதாவது மறைக்கிறேன் என நினைக்கிறியா மனோஜ்.
மனோஜ் : அப்படி எல்லாம் நினைக்கல ரோகினி நான் அது சின்ன சின்ன தப்பு பண்ணி உன் கிட்ட சொல்லிருக்கேன். ஆனா நீ எந்த தப்புமே பண்ணது கிடையாது" என மனோஜ் சொல்கிறான்.
ஸ்ருதியும் ரவியும் போட்டியில் ஜெயிக்காதது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
"ஸ்ருதி : நாம ரெண்டு பேரும் சரியா பிளான் பண்ணி இருக்கணும். அங்க போய் தப்பு தப்பா மாத்தி மாத்தி பேசிட்டோம். நான் நமக்கு குழந்தை வேண்டாம்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன். நீயும் ரெஸ்டாரென்ட் ஆரம்பிக்கணும் சொல்லி இருந்த. அப்புறம் ஏன் அங்க போய் நமக்கு மூணு குழந்தை வேணும்னு சொன்ன?
ரவி: அங்க போய் பர்சனல் விஷயத்த எல்லாம் சொல்ல முடியுமா ஸ்ருதி" என ரவி கேட்கிறான்.
ஸ்ருதி : அப்போ பொம்பளைங்கனா என்ன குழந்தை பெத்துக்கிற மிஷினா. அங்க போய் மூணு நாலு குழந்தைங்க வேணும்னு சொல்ற.
ரவி : ஆள விடு எனக்கு குழந்தையே வேண்டாம்.
ஸ்ருதி: அது நீ எப்படி சொல்ல முடியும் எனக்கு குழந்தை வேணும் என ஸ்ருதி சொல்கிறாள்.
மீனாவும் முத்துவும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றி பெற்ற பணத்தில் என்ன செய்யலாம் என யோசிக்கும் போது ரூம் கட்டலாம் என மீனா ஐடியா கொடுக்கிறார். மீனாவுக்கு தெரிந்த மேஸ்திரி ஒருவர் இருக்கிறார். அவர் மூலம் அந்த ரூம் கட்ட எவ்வளவு செலவாகும் என விசாரிக்கலாம் என சொல்கிறாள் மீனா.
அடுத்த நாள் முத்து அந்த மேஸ்திரியை அழைத்து வருகிறான். மாடிக்கு அழைத்து சென்று ரூம் கட்ட எவ்வளவு செலவாகும் என விசாரிக்கிறான். அப்போது மேஸ்திரி இந்த ரூம் கட்ட நாலு லட்சம் செலவாகும் என சொல்கிறார்.
முத்து: இப்போ ஒரு லட்சத்தை வைச்சு ஆரம்பிக்கலாம். முடிக்கிறதுக்குள்ள மீதி பணத்தை கொடுத்துடுறேன்" என்கிறான் முத்து.
மேஸ்திரி : அப்படி பண்ண முடியாது தம்பி.
முத்து : சரி நான் பணத்தை ரெடி பண்ணிட்டு சொல்றேன்" என முத்து அனுப்பி வைக்கிறான்.
மனோஜ் வீட்டுக்கு நிறைய கிஃப்ட் வாங்கி வந்திருக்கிறான். ரோகினிக்காக தாலி செயின் வாங்கி வந்திருக்கிறான்.
விஜயா: உன் புருஷன் தான் உனக்கு வாங்கி தரேன்னு சொன்னான். ஆனா இன்னும் தாலி மட்டும் தான் வாங்கிக் கொடுத்திருக்கேன்" என மீனாவை வம்புக்கு இழுக்கிறார் விஜயா.
மனோஜ் விஜயாவிடம் சொல்லி ரோகினிக்குக்கு தாலியை மாற்றிக் விட சொல்கிறான். ரோகினியும் மீனாவை அவமானப்படுத்தி பேச "என்னுடைய புருஷன் எனக்கு வாங்கி தருவார். அத பத்தி நீங்க கவலைப்பட தேவையில்லை" என முகத்தில் அடித்தாற் போல் சொல்லி விடுகிறாள் மீனா.
விஜயாவுக்காக மனோஜ் ஒரு புடவை வாங்கி வந்து கொடுத்திருக்கிறான். அத அதை பார்த்து விஜயா பூரிக்கிறாள். "சிலதெல்லாம் சொல்லுது. ஆனா எதுவும் செய்கிறது இல்ல. ஆனா நீ சொன்ன உடனேயே வாங்கி கொடுத்துட்ட மனோஜ் என பாராட்டி பேச அண்ணாமலை விஜயாவை கண்டிக்கிறார். ஒருத்தரை பாராட்டி பேசுவதற்காக மற்றொருவரை கேவலப்படுத்தி பேசாதே என சொல்கிறார் அண்ணாமலை. அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion