Seetha Raman: மகாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் சீதா, ஷாக்கான ராம் - சீதா ராமன் இன்று!
மகா மற்றும் அர்ச்சனா இருவரும் “நாம அந்த தையல்காரி கிட்ட மன்னிப்பு கேட்கணுமா.. அதுக்கு எல்லாம் வாய்ப்பே கிடையாது” என பேசிக்கொண்டு சென்றனர்.
![Seetha Raman: மகாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் சீதா, ஷாக்கான ராம் - சீதா ராமன் இன்று! Seetha Raman serial zee tamil November 3rd today episode written update details Seetha Raman: மகாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் சீதா, ஷாக்கான ராம் - சீதா ராமன் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/03/90b1126f470af2e7751c82fccfdfb0b31699017997706574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.
இது சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ராமின் தங்கைகள் மூன்று பேரும் மொத்த குடும்பத்திடம் வசமாக சிக்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
வீட்டுக்கு வந்த மகா 3 பேரையும் போட்டு அடி வெளுத்து எடுக்க, அர்ச்சனா "மகா உன் கால்ல கூட விழுகிறேன், அவங்கள அடிக்காத" எனக் கெஞ்சியும் மகா அதை கண்டுகொள்ளாமல் அடி கொடுத்துக் கொண்டு இருக்கிறார். பிறகு சீதா “அடிச்சது போதும் மன்னிப்பு கேளுங்க” என்று சொல்ல, மகா கோபமாக போய் மன்னிப்பு கேளுங்க என்று சொல்ல சீதா “மன்னிப்பு கேட்க வேண்டியது அவங்க கிடையாது, நீங்களும் அர்ச்சனாவும் தான்” என அதிர்ச்சி கொடுக்கிறார்.
“அன்னைக்கு அவங்க தப்பு பண்ணி இருக்காங்கன்னு சொல்லும்போது எங்க வளர்ப்பு சரியாத்தான் இருக்கும்னு நீங்கதானே சொன்னீங்க அப்ப நீங்க தான் மன்னிப்பு கேட்கணும்” என்று கூறுகிறார். இதனால் ராம் உட்பட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ராம் சீதாவை ரூமுக்கு அழைத்துச் செல்ல “நீங்க மன்னிப்பு கேட்டு தான் ஆகணும், இல்லனா இந்த வீட்டை விட்டு வெளியே போகணும்” என எச்சரித்துவிட்டு உள்ளே செல்கிறாள். ரூமுக்குள் வந்த சீதாவிடம் “சித்தி எதுக்கு மன்னிப்பு கேட்கணும், அவங்க என்ன தப்பு பண்ணாங்க?” என்ற கேள்வி கேட்க, சீதா “அவன தானே அன்றைக்கு என்னை அவ்வளவு டார்ச்சர் பண்ணி அவங்க கிட்ட மன்னிப்பு கேட்க வச்சாங்க, அதெல்லாம் மறந்துட்டீங்களா பாஸ்” எனக் கேள்வி கேட்கிறாள்.
பிறகு துரை சீதாவுக்கு முழுவதுமாக சப்போர்ட் செய்ய, ராம் குழப்பத்தில் இருக்கிறான். இங்கே மகா மற்றும் அர்ச்சனா இருவரும் “நாம அந்த தையல்காரி கிட்ட மன்னிப்பு கேட்கணுமா.. அதுக்கு எல்லாம் வாய்ப்பே கிடையாது” என பேசிக்கொண்டு சென்றனர். பிறகு ரூமுக்கு வந்த மூன்று தங்கைகளும் சீதாவிடம் “நாங்க உங்ககிட்ட எவ்வளவு வேணாலும் மன்னிப்பு கேட்கவும் ஆனால் சித்தி மட்டும் கேட்க சொல்லாதீங்க” எனக் கெஞ்சுகின்றனர்.
ஆனால் சீதா, அவர்கள் மன்னிப்பு கேட்டு தான் ஆகணும் என உறுதியாக இருக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)