மாயாவை விசாரிக்கும் கார்த்திக்! பாட்டியில் கனவில் முருகன் சொல்லும் சங்கதி - கார்த்திகை தீபத்தில் இன்று
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். இந்த தொடரில் வரும் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் மாயா மகேஷிடம் எப்படியாவது? சாமுண்டீஸ்வரி சொத்துக்களை அடைந்து விட வேண்டும் என ஏற்றி விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மகேஷை அப்பாவியாக நடிக்கச் சொல்லும் மாயா:
அதாவது, மகேஷ் மற்றும் மாயா என இருவரும் சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வர வீட்டை பார்த்து வாயை பிளக்கின்றனர். மாயா மகேஷிடம் "இதுதான் நீ வாழ போற வீடு.. நல்லா பாத்து ரசிச்சிக்க.. ஆனா வெளிய காட்டாதே.. இப்போ இருக்கிற மாதிரியே எப்பவும் அப்பாவி மாதிரியே முகத்தை வச்சுக்கோ" என சொல்லிக் கொடுக்கிறாள்.
அடுத்ததாக சாமுண்டீஸ்வரி குடும்பத்தினர் இவர்களை வரவேற்று வீட்டுக்குள் உட்கார வைக்கின்றனர். சாமுண்டீஸ்வரி மகேஷ் வீட்டோட மாப்பிள்ளை ஆக வேண்டும் என்பது குறித்த கண்டிஷங்களை சொல்ல, அதற்கெல்லாம் மாயா சம்மதம் சொல்கிறாள். அடுத்து மாயாவின் கணவர் குறித்து விசாரிக்க அவர் உயிரோடு இல்லை என்று சொல்ல பெயரைக் கேட்டதும் சாமுண்டீஸ்வரி எங்க செங்கல் சூளையில் வேலை செய்தவரா? என்று கேட்க மாயா இல்லை என்று சொல்ல, கார்த்திக் ஏன் பொய் சொல்கிறார்கள்? என சந்தேகமடைகிறான்.
மாயாவை விசாரிக்கும் கார்த்திக்:
பிறகு கார்த்திக் மாயாவை தனியாக கூப்பிட்டு, "ஏன் பொய் சொன்னீங்க?" என்று விசாரிக்க உண்மை தெரிஞ்சு, "இந்த கல்யாணம் வேண்டாம்"னு சாமுண்டீஸ்வரி சொல்லி விட கூடாது என்பதற்காக தான் அப்படி சொன்னதாக சொல்லி சமாளிக்கிறாள்.
அடுத்து சாமுண்டீஸ்வரி கார்த்தியுடன் சிவனாண்டி வீட்டுக்கு வந்து, என் பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் வச்சிருக்கேன். வந்து வயிறு நிறைய சாப்பிட்டு போங்க என அவனை வெறுப்பேற்றுகிறாள். "நிச்சயதார்த்தத்துக்கு கேட்டரிங் சர்வீஸ் எல்லாம் பெருசா பயங்கரமா இருக்கணும்..அதற்கான வேலை எல்லாம் நீ கவனிச்சுக்கோ" என கார்த்திக்கு ஆர்டர் போடுகிறாள்.
முருகன் நடத்தும் திருவிளையாடல்:
மறுபக்கம் பரமேஸ்வரி பாட்டி தூங்கிக் கொண்டிருக்க குட்டி முருகன் அவளது கனவில் வந்து, கோவிலுக்கு வந்து என்னை அந்த அதட்டு அதட்டுற ? என கேள்வி கேட்க பரமேஸ்வரி பாட்டி, "பின்ன என்ன முருகா?. ரேவதிக்கும் கார்த்திக்கும் கல்யாணம் ஆகும்னு நான் ஆசையோட காத்துட்டு இருந்தேன் ஆனால் அவன் போன் பண்ணி ரேவதிக்கு நிச்சயதார்த்தம்னு சொல்றான்" என்று சொல்கிறாள்.
முருகன் "அதெல்லாம் என்னுடைய திருவிளையாடல்! இல்லனா என்னை நீ ஞாபகம் வச்சுப்பியா? நடக்கிறது எல்லாம் பொறுத்திருந்து பாரு! கடைசில கார்த்திக்கும் ரேவதிக்கும் தான் கல்யாணம் நடக்கும்" என்று சொல்ல பரமேஸ்வரி பாட்டி அதைக் கேட்டு சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.