Idhayam Serial: அவாய்ட் செய்யும் பாரதி: சாரதாவுக்கு வந்த சந்தேகம், ட்விஸ்ட் கொடுத்த ஆதி - இதயம் சீரியல் இன்று!
பாரதி ஆதியை மொத்தமாக அவாய்ட் செய்ய, அதனால் ஆதி மனமுடைந்து எதிலும் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறான்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி போட்டோவை கிழித்துப் போட்டதால், முதல் முறையாக “உன்னை வெறுக்கிறேன்” என்று ஆதி சொல்லிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
பாரதி ஆதியை மொத்தமாக அவாய்ட் செய்ய, அதனால் ஆதி மனமுடைந்து எதிலும் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறான். வீட்டிலும் யாரிடமும் எதுவும் பேசாமல் எதையோ பறி கொடுத்தது போலவே இருக்க, சாரதா “ஏன் இவன் இப்படி இருக்கிறான்? அப்படி அந்த பாரதியிடம் என்ன இருக்கு” என்று கடுப்பாகிக்கிறாள்.
சாரதா ஆதியை சாப்பிடக் கூப்பிட்டும் அவன் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். இதனால் சாரதா ஆதியிடமே பேசி விடலாம் என்று முடிவெடுத்து எதுவும் தெரியாதது போல பேசி போட்டு வாங்க முடிவெடுக்கிறாள். ஆதியை கூப்பிட்டு “நீ காதலிக்கிற பொண்ணு யார்? சொல்லு பா அவங்க வீட்டிற்கு போய் பேசலாம்” என்று சொல்ல, ஆதி “இந்தக் கல்யாணம் நடக்காது மா, அவ என்னை வேண்டான்னு சொல்லிட்டா” என்று சொல்கிறான்.
கடைசி வரை அது பாரதி தான் என்று சொல்லாமல் மறைத்து விடுகிறான் ஆதி, இதனால் சாரதா “ஒருவேளை நாம பேசியதை ஆதியிடம் சொல்லிட்டாளோ?” என்று பாரதி மீது சந்தேகம் கொள்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய இதயம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Sarpatta 2: நீயே ஒளி, நீதான் வழி.. சார்பட்டா 2ஆம் பாகத்துக்காக வெறித்தனமாக பயிற்சி எடுக்கும் ஆர்யா!