Ethirneechal : ஃபேக்டரி தொடங்கும் ஜனனி - சக்தி... எதிர்நீச்சலில் நேற்று என்ன நடந்தது?
Ethir neechal September 7 episode :* பேக்டரி துவங்கப்போகும் சக்திக்கும் ஜனனிக்கும் அப்பத்தா கொடுத்த அட்வைஸ் * குணசேகரன் ரியாக்ஷன் என்ன? எதிர் நீச்சலில் நேற்று என்ன நடந்தது ?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் சக்தி வந்து ஜனனிக்கு வாழ்த்துக்கள் சொல்லி பேங்கில் லோன் கிடைத்ததை பற்றி சொல்லி சந்தோஷப்படுகிறான். அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை சொல்கிறார்கள். நல்ல நாள் பார்த்து பேக்டரியை திறந்துவிட வேண்டியது தான் என சொல்லி சந்தோஷப்படுகிறார்கள்.
அப்பத்தாவிடம் சென்று குணசேகரன் பற்றி பேசுகிறார்கள். அப்போது பேக்டரி ஆரம்பிக்கப்போவது குறித்து சொல்கிறாள் ஜனனி. அதை கேட்டு அப்பத்தா சந்தோஷப்படுகிறார். வீட்டில் எல்லாரிடமும் போய் சொல்லி திறப்பு விழாவுக்கு அழைக்க சொல்கிறார் அப்பத்தா. நல்ல காரியம் செய்வதை யாரிடமும் மறைக்க தேவையில்லை என சொல்லி அனுப்பி வைக்கிறார்.
ஈஸ்வரியும் நந்தினியும் சமயலறையில் பேசிக்கொண்டு இருக்கும்போது அப்பத்தா சொன்னதை பற்றி அவர்களிடம் சொல்கிறார்கள் ஜனனியும் சக்தியும். அப்பத்தா எதற்காக அப்படி சொல்லி இருப்பாங்க என்பதை பற்றி ஈஸ்வரி எடுத்து சொல்கிறாள். "கிறுக்கு புத்தி உள்ளவங்க அவங்க கிட்ட போய் சொல்றது சரியா வருமா?" என நந்தினி சொல்கிறாள். சக்தி ஜனனி இருவருமே இதை வெளிப்படையாக செய்வது நல்லது தான் என்கிறார்கள். "தப்பு பண்றவங்க தைரியமா எல்லாத்தையும் செய்யும் போது நாம ஏன் அவர்களை பார்த்து பயப்படணும். அவர் அப்படி ஏதாவது செய்தால் அதை எப்படி சமாளிக்கிறது என்பது எனக்கு தெரியும். ஒரு ஓரத்தில் குழப்பமாக இருந்தது. ஆனால் நிச்சயமாக அதை சொல்லலாம் என முடிவு எடுத்துட்டேன்" என துணிச்சலாக சொல்கிறாள் ஜனனி.
கரிகாலனும் ஆதிரையும் கொடைக்கானலுக்கு ஹனிமூன் செல்வதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்ததாக கரிகாலனிடம் சொல்கிறார் குணசேகரன். அதற்கு கரிகாலன் நக்கலாக "உங்களுக்கு வசதியா பக்கத்திலேயே ஏற்பாடு பண்ணி இருக்கீங்களா?" என கேட்கிறான். ஆதிரை போக முடியாது என சொல்ல கதிர் அவளை அடிக்க செல்கிறான். கதிரிடம் இதை நான் பார்த்து கொள்கிறேன் என கரிகாலன் சொல்லிவிடுகிறான்.
சக்தியும் ஜனனியும் வந்து விசாலாட்சி அம்மாவிடம் "புதுசா கம்பெனி ஆரம்பிக்க போகிறோம். எல்லாம் தயாராக இருக்கிறது. நல்ல நாள் பார்த்து தொடங்கி விட வேண்டியது தான். நல்ல நாள் பார்த்து சொல்லு " என சக்தி சொல்கிறான். விசாலாட்சி அம்மாவும் "சரிப்பா பார்த்து சொல்றேன்" என சொல்லவும் குணசேகரன் "என்ன விளையாடுறியா நீ... யாரு வீட்ல வந்து யாரு கடையை போடுறது" என திமிராக சொல்லி சக்தியையும் ஜனனியையும் பார்த்து முறைக்கிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.