Ethir neechal July 20: திருட்டு களவாணி யார்? ரணகளமாக மாறிய குணசேகரன் கம்பெனி... ஜீவானந்தம் வைத்திருக்கும் ட்விஸ்ட் என்ன?
* கோபத்தின் உச்சியில் புலம்பியபடி கம்பெனிக்கு செல்லும் குணசேகரன் * மரியாதை இல்லாமல் பேசிய கதிர் ஃபர்ஹானாவிடம் தர்ம அடி * தோழரை சந்திக்க செல்லும் குணசேகரன் - ஜனனி நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் என்ட்ரி வர உள்ளதால் மிகவும் பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது.
இது மொத்தமும் குணசேகரன் பிளான். ஜீவானந்தம் அவருடைய ஆள் தான் அதனால் தான் அவன் நாம போன் பண்ணும் போது எடுக்கவில்லை. அவர் சொன்ன கவுண்ட் டவுன் அர்த்தம் இப்போ புரியுதா. கரெக்டா அது முடியவும் ஜீவானந்தம் உள்ளே வரவும் சரியாக இருந்தது அல்லவா. சொத்து முழுவதும் குணசேகரன் கையை விட்டு இனி போய் விடும் என ஈஸ்வரி சொல்கிறாள்.
ஈஸ்வரி சொன்னதை தாங்க முடியாத ஜனனி இல்லை இதை நான் நடக்க விடமாட்டேன். அவரை ஜெயிக்க நான் விடமாட்டேன். இதுக்கு ஒரு முடிவு தெரியணும் என சொல்லி சக்தியை அழைத்து கொண்டு செல்கிறாள்.
குணசேகரன், ஞானம், கதிர் மற்றும் ஆடிட்டர் அனைவரும் காரில் கம்பெனிக்கு செல்கிறார்கள். செல்லும் வழியெல்லாம் "யாரு அந்த ஜீவானந்தம். கஷ்டப்பட்டு நான் சம்பாதிச்ச சொத்த எவனோ ஒருத்தன் கிட்ட கொடுத்துடுவேனா" என்கிறார் குணசேகரன். "அப்படியெல்லாம் விட மாட்டோம் நீங்க கவலைப்படாதீங்க. இந்த ஆளு தான் ஏதோ உளறாரு" என்கிறான் ஞானம். நான் நல்ல விசாரிச்சிட்டு தான் சொல்றேன், உங்க அப்பத்தா அவருக்கு ஏதோ ஒரு வகையில உரிமையை எழுதி கொடுத்து இருக்காங்க என்கிறார்.
திடீரென ஜனனி தான் அன்னைக்கே இந்த சொத்து உனக்கு வராது என சொன்னாள் அவள் தான் ஆணிவேர். அவளை ஒரு வழி பண்ணியே ஆக வேண்டும். அவளுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு என்கிறார். அவளை பிறகு பார்த்துக்கலாம் முதலில் அந்த ஜீவானந்தத்தை வெளியில் விரட்டணும். அப்பத்தா தான் டபுள் கேம் ஆடியிருக்கு அது கழுத்தை புடிச்சு நசுக்கணும் என கோபத்தில் கொந்தளித்துக் கொண்டே செல்கிறார்கள்.
கம்பெனியில் அடிதடி சண்டை நடக்கிறது. ஜனனி வந்து தடுக்கிறாள். குணசேகரன் ஜனனியை 'ஏய் களவாணி வந்துட்டியா... நீ தானே எல்லாத்துக்கும் காரணம். எல்லாம் பிளான் பண்ணி தான் நடிக்கிற" என கத்துகிறார். ஜீவானந்தம் உங்களுடைய ஆள் தானே அதனால் தானே அவனை வைத்து அப்பத்தாவின் கைரேகையை எடுக்க சொல்லி இருக்கீங்க. இங்க பாருங்க என புட்டேஜில் இருக்கும் ஜீவானந்தம் போட்டோவை காட்டுகிறாள் ஜனனி. அதை பார்த்த குணசேகரன் இவன் யாருன்னு எங்களுக்கு தெரியாது. என்ன பிரச்சனையை திசை திருப்புரியா என கத்துகிறார்கள்.
அனைவரும் சத்தம் போடுவதை கேட்டு ஃபர்ஹானா அங்கே வருகிறாள். இங்க நின்று கொண்டு யாரும் சத்தம் போடக்கூடாது எல்லாரும் வெளியே செல்லுங்கள். நாங்கள் இந்த கம்பெனியை சட்டப்படி வங்கியுள்ளோம்" என்கிறாள். மரியாதையா பேசுங்க என்றதும் எகிறி போய் அவளை அடிக்க செல்ல ஃபர்ஹானா அவனை தடுத்து கைகளை முறுக்கி தரும அடி கொடுக்கிறாள். ஜனனி வந்து நீங்க தானே அன்னைக்கு வீட்டுக்கு வந்து அப்பத்தா கைரேகை எடுத்துட்டு போனது. உங்களோட வந்த ஆள் எங்க? அப்பத்தா கைரேகையை வைச்சு பித்தலாட்டம் செய்ரீங்க. இது சட்டப்படி செல்லாது மரியாதையா வெளியே போங்க என சொல்கிறாள் ஜனனி.
அமைதியா பேசினால் ஜீவானந்தத்தை சந்திக்கலாம் என்கிறாள் ஃபர்ஹானா. நீங்கள் மட்டும் வாங்க ஆனா இவன் வரக்கூடாது என கதிரை உள்ளே வர அனுமதிக்கவில்லை. தோழர் மீட்டிங்கில் இருக்கிறார் வெயிட் பண்ணுங்க என சொல்லிவிட்டு செல்கிறாள் ஃபர்ஹானா. வெளியில் நின்று கொண்டு குணசேகரன் புலம்பி கொண்டே இருக்கிறார். இன்னும் கூட இது எல்லாம் ஜனனியின் சதி வேலை தான் என நம்புகிறார்.
பர்ஹானா வந்து வாங்க தோழர் உங்களை அழைக்கிறார் என உள்ளே வர சொல்கிறாள். குணசேகரன் ஜனனியை முன்னே போக சொல்கிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் உண்மை என்ன யாரு களவாணி தனம் செய்றது என்பது தெரிந்து விடும் என அனைவரும் ஜனனியை பின்தொடர்கிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.