Ethirneechal Aug 19 Promo: உயிர் இழந்தது யார்? அதிர்ச்சியில் உறையும் ஜனனி... உண்மையை உடைத்த அப்பத்தா... பரபரப்பான கட்டத்தில் எதிர் நீச்சல்!
Ethir neechal August 19 Promo :*ஜீவானந்தம் வீட்டுக்குள் புகுந்து தாக்க ஆரம்பித்த வளவன் ஆட்கள்* அதிர்ச்சியில் உறைந்துபோன ஜனனி* உண்மையை உடைத்த அப்பத்தா இன்றைய எதிர் நீச்சல் எபிசோட் ப்ரோமோ
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தம் மகளுடனும் மனைவியுடனும் இனிமையான நேரத்தை அனுபவிக்கிறார். கயல்விழி ஜீவானந்தத்திடம் அவர்கள் மகள் அப்பாவை மிகவும் மிஸ் செய்கிறாள் என்றும் அவருடனே இருக்க விரும்புகிறாள் என்றும் கூறுகிறாள். ஜனனி ஒரு பக்கமும், கதிர், வளவன் மறுபக்கமும் ஜீவானந்தத்தை தேடி வருகிறார்கள்.
குணசேகரன் அப்பத்தாவிடம் சொத்து பற்றி வாயை திறந்து சொல்ல சொல்லி கத்திக்கொண்டு இருக்கிறார். அவருக்கு எதிராக பேசிய தர்ஷினியை அடிக்க வருகிறார். ஆடிட்டர் மற்றும் வக்கீலை வரச்சொல்லி அவர்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். அப்பத்தா ஒன்றுமே புரியாமல் அனைவரையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இன்றைய எபிசோடில் ஜீவானந்தம் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டு இருக்கிறார். அப்போது மகள் வெண்பா "அப்பா எனக்கு ஒரு ஆசை. இந்த மலையை கடந்து மீதம் உள்ள அழகான உலகத்தை உங்களோடவும் அம்மவோடவும் சேர்ந்து ரசிக்கணும் அனுபவிக்கனும். நடக்குமா அப்பா" என கேட்கிறாள். நிச்சயமாக நடக்கும் என ஜீவானந்தம் மகளுக்கு உறுதி அளிக்கிறார்.
அந்த நேரத்தில் கதிர் மற்றும் வளவன் ஜீவானந்தம் வீட்டைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஜனனியும் வந்து சேர்கிறாள். வீட்டுக்குள் புகுந்த அடியாட்கள் அரிவாளுடன் ஜீவானந்தம் குடும்பத்தை தாக்குகிறார்கள். ஜீவானந்தமும் அரிவாளை எடுத்து அவர்களை தாக்குகிறார். அதற்குள் ஜன்னல் வழியாக கதிர், வளவனை சுட சொல்லி சொல்கிறான். பயந்து போன வெண்பா "அப்பா" என அழுகிறாள். ஜனனியும் அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறாள். ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. யாரோ ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அவர் யார் என்பது தெரியவில்லை. ஜனனி அவரைப் பார்த்து அதிர்ச்சியில் கலங்குகிறாள்.
குணசேகரன் அப்பத்தாவை மீண்டும் மீண்டும் கேட்க வாயைத் திறந்து பேசுகிறார் அப்பத்தா. "என்ன முழிக்கிற... ஜீவானந்தத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?" என்கிறார். அதற்கு அப்பத்தா "ஜீவானந்தம் செய்தது அத்தனையும் எனக்காக தான்" என்கிறார் அப்பத்தா. அதைக் கேட்ட குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய எதிர் நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) மிகவும் பயங்கரமாக இருக்கப் போகிறது. உயிர் இழப்புகள் நிகழப்போகிறது. அது யாராக இருக்கும் என இன்றைய எதிர் நீச்சல் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பதட்டமாக இருக்கிறார்கள். ஜீவானந்தம் மனைவியா அல்லது கதிரா யார் உயிர் பிரிந்தது என்பது பரபரப்பைக் கிளப்புகிறது. இந்த ப்ரோமோ மூலம் வேறு ஏதும் ட்விஸ்ட் இருக்கிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.