Baakiyalakshmi Serial: வாங்க போலாம் விவாகரத்து வாங்க..கோபியை கிழித்த பாக்யா.. இப்போ என்ன?
பாக்யாவை பார்க்க வந்த கோபி மகள் இனியாவுக்காக வீட்டுக்கு வருமாறு அழைத்தது, பாக்யா மீண்டும் வீட்டுக்கு வந்தது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகின.
பாக்கியலட்சுமி சீரியலில் வரும் வாரம் ஒளிபரப்பாகவுள்ள எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது, அவரை நடுவீட்டுல் நிற்க வைத்து கேள்வி கேட்டது, பாக்யா வீட்டை விட்டு வெளியேறியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நகர்கிறது.
கடந்த வாரம் முழுக்க வீட்டை விட்டு வெளியேறிய பாக்யாவை குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வந்து சமாதானப்படுத்துவது, கோபி - ராதிகா சந்திப்பு, பாக்யாவை பார்க்க வந்த கோபி மகள் இனியாவுக்காக வீட்டுக்கு வருமாறு அழைத்தது, பாக்யா மீண்டும் வீட்டுக்கு வந்தது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகின. இனி இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்யாவை கழட்டி விட முடிவில் இருந்த கோபிக்கு அவர் திரும்பி வந்தது அதிர்ச்சியாக இருந்தது. ஏற்கனவே கோபி-பாக்யா இடையேயான விவாகரத்துக்காக கடைசியாக இருவரும் கோர்ட்டுக்கு வரும்படி லெட்டர் வந்திருந்தது. அதன்படி கோபி ஆசைப்பட்டு கேட்டு விவாகரத்தை வழங்க பாக்யா முடிவு செய்து அவரை கோர்ட்டுக்கு அழைக்கும் காட்சிகள் இடம்பெறுகிறது. பாக்யாவை குடும்பத்தினர் சமாதானப்படுத்தும் நிலையில் கோபி என்ன முடிவு செய்யப்போகிறார் போன்ற காட்சிகள் இடம் பெறவுள்ளது.தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 2 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்