Baakiyalakshmi Serial: எமோஷனல் பிளாக் மெயில் செய்யும் குடும்பத்தினர்...ராதிகாவிடம் உண்மையை மறைக்கும் கோபி...!
நேராக கோவிலுக்கு செல்லும் ராமமூர்த்தி கடவுளிடம் வேண்டிவிட்டு கோபிக்கு போனை போடுகிறார். அழைப்பு வந்ததும் டென்ஷனாகும் கோபி, இப்ப எதுக்கு இங்க கால் பண்றீங்க என கேட்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை அவரது அப்பா ராம மூர்த்தி சந்தித்து பேசும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகிறது.
ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, . ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்த காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
குறுக்கே வந்த எழில்
கோபியை பார்த்து பேச ராம மூர்த்தி கிளம்பும் வேளையில் அவரிடம் ஈஸ்வரி கோபி செய்யும் திருமணம் பற்றியும், பாக்யாவின் நிலைமை பற்றியும் வருத்தப்படுகிறார். நானும் உங்களோடு வருகிறேன். நீங்க தனியா போய் உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்ணன்னு தெரியலையே என புலம்புகிறார். ஆனால் வீட்டில் இனியா தனியா இருப்பதால் இங்கேயே இருக்குமாறு ஈஸ்வரியிடம் மூர்த்தி சொல்லிவிட்டு கிளம்ப எழில் குறுக்கே வந்து எங்கே போறீங்க என கேட்கிறார். தனது நண்பரின் மகள் திருமணத்துக்கு போறேன்னு சொல்லிட்டு மூர்த்தி அங்கிருந்து கிளம்புகிறார்.
ராதிகாவிடம் உண்மையை மறைக்கும் கோபி
நேராக கோவிலுக்கு செல்லும் அவர் கடவுளிடம் வேண்டிவிட்டு கோபிக்கு போனை போடுகிறார். அழைப்பு வந்ததும் டென்ஷனாகும் கோபி, இப்ப எதுக்கு இங்க கால் பண்றீங்க என கேட்கிறார். நான் உடனே உன்னை நேரில் பார்த்து பேசணும் பார்க்கணும் என ராமமூர்த்தி சொல்ல, நீங்க என்ன பேச போறீங்க என எனக்கு தெரியும். ஆனால் அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை என கோபி சொல்கிறார். அப்போது அங்கு வரும் ராதிகா என்ன பிரச்சனை என கேட்க, ஆபீஸில் கிளைண்ட் பண்ற வேலை என பொய் சொல்கிறார். அப்பாவியாய் அதை நம்பும் ராதிகா, எதுவாக இருந்தாலும் போய் பேசி சரி பண்ணிட்டு வாங்க. ரிஷப்சன் நடக்குறப்ப டல்லா இருந்தா நல்லாருக்காதுன்னு சொல்லி கோபியை அனுப்பி வைக்கிறார். அவரும் ராம மூர்த்தியை சந்திக்க கோவிலுக்கு போகிறார்.
இனியாவை வைத்து பிளாக்மெயில் செய்யும் மூர்த்தி
கோவிலுக்கு வரும் கோபியிடம், நீ செய்றது எல்லாமே தப்பு. இந்த திருமணமே வேண்டாம் என ராமமூர்த்தி சொல்ல, அதை கேட்டு மேலும் கத்துகிறார். எனக்கும் பாக்யாவுக்கும் முடிஞ்சி போச்சி. நான் ராதிகாவை கல்யாணம் பண்ணப்போறது உறுதி. இதில் நான் பின்வாங்க போறது இல்ல என உறுதியாக சொல்கிறார். இதனைத் தொடர்ந்து பேசும் மூர்த்தி நீ கல்யாணம் பண்ணா இனியா, செழியன், எழில் எல்லாரும் என்ன நினைப்பாங்க..உன் ஆபீஸ்ல உன்னை மதிப்பாங்களா என கேட்கிறார்.
இதெல்லாம் பாக்யா டைவர்ஸ் கொடுக்குறப்ப தெரியல..நீங்க என் பிள்ளைங்க முன்னாடி அடிக்கிறப்ப தெரியல. இப்ப மட்டும் தெரியுதா. இந்த மாதிரி எமோஷனல் பிளாக் மெயில் பண்ணாதீங்க.நான் கேட்கப் போறது இல்ல என கோபி தன் பேச்சில் உறுதியாக இருக்கிறார். உடனே மூர்த்தி, இன்னைக்கு இல்லன்னாலும் ஒரு நாள் என்னுடைய நிலைமையை புரிஞ்சிகிட்டு அம்மா, இனியா என எல்லோரும் வருவாங்க. அதை நீங்க பார்க்கத்தான் போறீங்க என கோபி சொல்ல, நீ பகல் கனவு காணாத, நிகழ்கால வாழ்க்கையை யோசிச்சி பாரு என ராம மூர்த்தி சொல்ல, இதுக்குமேல பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல என்ற கோணத்தில் கோபி அங்கிருந்து செல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.