மேலும் அறிய

அரசுப்பள்ளிகளை தத்தெடுக்கிறோமா? பெருந்தன்மையை கொச்சைப்‌படுத்துவதா? தனியார் பள்ளிகள் சங்கம் கேள்வி!

அரசு பள்ளிகளை தத்தெடுக்கப் போகிறோம் என்று எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை, அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளும் அதுபோன்று எதுவும் கூறவில்லை என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

சொல்லப்படாத ஒரு வார்த்தையை அரசியலாக்க வேண்டாம் என்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

முன்னதாக அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குத் தத்துக் கொடுப்பதா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து இருந்தது.

அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து கட்டமைப்பு வசதிகளா?

குறிப்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ’’அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதன் நோக்கம் படிப்படியாக அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும். அரசுப்பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூறி இருந்தது.

இந்த நிலையில், இதற்கு தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

’’அரசு பள்ளிகளின்‌ வளர்ச்சியில்‌ CSR  மூலம்‌ தனியார்‌ பள்ளிகளின்‌ பங்களிப்பு இருக்கும்‌ என்றுதான்‌ சொன்னோம்‌.

தமிழ்நாட்டிலுள்ள 13,000-க்கும்‌ மேற்பட்ட தனியார்‌ பள்ளிகள்‌, மழலையர்‌ துவக்கப்‌ பள்ளிகள்‌, மெட்ரிகுலேஷன்‌ பள்ளிகள்‌, மெட்ரிகுலேஷன்‌ மேல்நிலைப்‌ பள்ளிகள்‌, சிபிஎஸ்‌இ உள்ளிட்ட இதரவாரிய பள்ளிகள்‌ என ஒட்டுமொத்த பள்ளிகளுக்கும்‌ பல்வேறு சங்கங்கள்‌ இயங்கி வந்தன. அந்த சங்கங்களை எல்லாம்‌ ஒருங்கிணைந்து பெரும்பான்மையான சங்கங்கள்‌ ஒன்றுகூடி தமிழ்நாடு தனியார்‌ பள்ளிகள்‌ சங்கம்‌ என்ற பெயரில்‌ ஒரு புதிய ஒரு சங்கத்தை உருவாக்கி அந்த சங்கத்தின்‌ துவக்க விழாவிற்கு பள்ளிக்‌ கல்வித்துறை அரசு செயலாளர்‌, தனியார்‌ பள்ளி இயக்குநர்‌, தொடக்கக்‌ கல்வி இயக்குநர்‌ மற்றும்‌ பள்ளிக்‌ கல்வித்துறை அமைச்சரை வாழ்த்துரை வழங்கவும்‌ விழாவினை துவக்கி வைக்கவும்‌ அழைத்தோம்‌. அவர்கள்‌ அனைவரும்‌ வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்கள்‌.

அரசு பள்ளிகளில்‌ பயின்ற நாங்கள்‌தான்‌

அரசு பள்ளிகளில்‌ பயின்ற நாங்கள்‌தான்‌ தனியார்‌ பள்ளிகளை நடத்தி வருகிறோம்‌. நாம்‌ அரசுப் பள்ளிகளுக்கு எந்த விதத்திலாவது பயன்பாடாக இருக்க வேண்டும்‌ என்ற உயரிய எண்ணத்தின்‌ அடிப்படையில்‌ அந்த நிகழ்வின்‌போது பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றிய அதே தருணத்தில்‌ வரும்‌ கல்வியாண்டில்‌ 500 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அருகாமையில் இருக்கிற தனியார்‌ பள்ளிகள்‌ அந்த பள்ளிகளில்‌ பயில்கிற மாணவர்களின்‌ கல்வி வளர்ச்சிக்கு உதவிடம்‌ வகையிலே நூலகங்கள்‌, பள்ளிக்கு வர்ணம்‌ பூசுதல்‌, பள்ளி விளையாட்டு மைதானங்களை  சுத்தப்படுத்துதல், தூய்மைப்‌படுத்துதல்‌ விளையாட்டு உபகரணப்‌ பொருட்களை வாங்கிக்‌ கொடுத்தல்‌, மாணவர்களுக்குத்‌ தேவையான இதர பொது அறிவு வளர்ச்சிக்கான புத்தகங்கள்‌ வாங்கிக்‌கொடுத்தல்‌, அதற்கான பொருட்கள்‌ வாங்கிக்‌ கொடுத்தல்‌, கணிணி உள்ளிட்ட கண்டுபிடிப்புகள்‌ சம்பந்தப்பட்ட நவீன பொருட்களை வாங்கிக்‌ கொடுத்தல்‌ என்று பல்வேறு வகையிலே உதவிட வேண்டும்‌ என்ற நோக்கத்தின்‌ அடிப்படையில்‌ மாணவர்களின்‌ வளர்ச்சிக்காக அரசு பள்ளிகளின்‌ உட்கட்டமைப்பை மேம்படுத்த 57% மூலம்‌ தனியார்‌ பள்ளிகளின்‌ பங்களிப்பு இருக்கும்‌ என்றுதான்‌ சொல்லப்பட்டதே தவிர எந்த இடத்திலும்‌ அரசு பள்ளிகளை தத்தெடுப்போம்‌ என்று நாங்களும்‌ சொல்லவில்லை. அமைச்சர்‌ உள்ளிட்ட அதிகாரிகள்‌ யாரும்‌ சொல்லவில்லை.

பெருந்தன்மையை கொச்சைப்‌படுத்துவதா?

சொல்லப்படாத ஒரு வார்த்தையை அரசியலாக்கி தனியார்‌ பள்ளிகள்‌ அரசு பள்ளிகளை தத்தெடுக்கிறதா? என்று கேட்பது உண்மையாகவே 500 பள்ளிகளுக்கு உதவத் தயாராக உள்ளோம்‌ என்று சொன்ன தனியார்‌ பள்ளி தாளாளர்களுடைய அந்தப்‌ பெருந்தன்மையை கொச்சைப்‌ படுத்துவதாக உள்ளது. ஆகவே தயவுகூர்ந்து இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்‌.

எந்த இடத்திலும்‌ தத்தெடுக்கப்படும்‌ என்ற வார்த்தை யாராலும்‌ உபயோகப்படுத்தப்படவில்லை. அரசு பள்ளிகளின்‌ வளர்ச்சிக்கு தனியார்‌ பள்ளிகள்‌ சிஎஸ்ஆர் மூலம்‌ பங்களிப்பார்கள்‌ உதவுவார்கள்‌ என்றுதான்‌ சொல்லப்பட்டதே தவிர தத்தெடுக்கும்‌ என்ற வார்த்தை இல்லை.

மேலும்‌ 500 அரசு பள்ளிகளின்‌ உட்கட்டமைப்பு மற்றும்‌ மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்க முன்வந்துள்ள தனியார்‌ பள்ளிகளுக்கு பெற்றோர்‌ ஆசிரியர்‌ கழகம்‌ முழு ஆதரவும்‌ நன்றியும்‌ தெரிவித்துள்ளதை இங்கே‌ தெரிவித்து கொள்கிறோம்‌’’.

இவ்வாறு தமிழக தனியார் பள்ளிகள் சங்கம தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”இனி ஜெயிலுக்கு வரமாட்டோம்” உறுதிமொழி எடுத்த கைதிகள்! | Salem Prisoners new yearIrfan View Video | ”என் அரசியல் பின்புலம்...என்ன காப்பாத்துறது உதயநிதி?”உடைத்து பேசிய இர்ஃபான்”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Chennai Flower Expo: யார் வருவாங்க? சென்னை மலர் கண்காட்சிக்கு இவ்வளவு கட்டணமா? மனமிறங்குமா தமிழக அரசு?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Anna University : சூடு பிடிக்கும் அரசியல் களம்.. தொடரும் போஸ்டர் அரசியல்.. Am I Next ? பின்னணி என்ன ?
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
Bhopal Gas Tragedy: 5,000+ உயிர்களை பறித்த விஷவாயு - 40 ஆண்டுகள், போபாலில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றம்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்
ஆண்ட பரம்பரை சர்ச்சை...  அமைச்சர் பி.மூர்த்தி என்ன சொல்லப்போகிறார்..?
ஆண்ட பரம்பரை சர்ச்சை... அமைச்சர் பி.மூர்த்தி என்ன சொல்லப்போகிறார்..?
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: தைரியமாக வீடு புகுந்த வாலிபர்! பின்னர் நடந்தது என்ன?
திரைப்பட பாணியில் திருட்டு! - கோபுர கலசத்தில் இரிடியம்! சிக்கிய இளைஞர்! என்ன நடந்தது?
திரைப்பட பாணியில் திருட்டு! - கோபுர கலசத்தில் இரிடியம்! சிக்கிய இளைஞர்! என்ன நடந்தது?
Watch Video: சாலையில் கட்டி புரண்டு, முடியை பிடித்து அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள் - ஒரே நபரை காதலித்ததால் விபரீதம்
Watch Video: சாலையில் கட்டி புரண்டு, முடியை பிடித்து அடித்துக்கொண்ட பள்ளி மாணவிகள் - ஒரே நபரை காதலித்ததால் விபரீதம்
Embed widget