மேலும் அறிய

Baakiyalakshmi Serial: ராதிகாவுடன் கல்யாணம் கேக்குதோ...நடக்கவே விடமாட்டேன்...கோபியிடம் எகிறிய ஈஸ்வரி

இன்னொரு பக்கம் பாக்யா கல்யாண ஆர்டருக்காக வீட்டில் ஜெனி, செல்வியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஈஸ்வரி கோபியின் திருமணம் பற்றி மறைமுகமாக பேசுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவுடன் நடக்கப்போகும் கல்யாணம் குறித்து ஈஸ்வரியிடம் கோபி பேசும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது. 

ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி 

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, . ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்த காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 

ஈஸ்வரியை அழைக்கும் கோபி 

ராதிகாவுடனான கல்யாணம் குறித்து தெரிவிக்க தனது அம்மா ஈஸ்வரியை கோபி கோவிலுக்கு அழைக்கிறார். அங்கு செல்லும் ஈஸ்வரியிடம் தான் வீட்டை விட்டு வெளியேறி, ரோட்டில் அலைந்தேன். சாப்பாடு சரியில்லாமல் கஷ்டப்பட்டேன். அதனால் எல்லாம் வெறுத்துவிட்டேன் என கூறி புலம்புகிறார். தொடர்ந்து நான் உங்களிடம் ஒரு விஷயம் பேச தான் வந்தேன் என கூறி தான் ராதிகாவை கல்யாணம் செய்ய போவதாக தெரிவிக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் ஈஸ்வரி, விளையாடாத கோபி என சொல்கிறார். 

ஆனால் தான் கல்யாணம் பண்ண போறது உறுதி என சொல்ல ஈஸ்வரி என்ன சொல்வதென தெரியாமல் முழிக்கிறார். உடனே கோபி இந்த குடும்பத்துக்காக உழைத்தது ஒரு பக்கம் என்றால், பிடிக்காத பாக்யாவோடு குடும்பம் நடத்தியது இன்னொரு பக்கம். அதனால் இருக்க கொஞ்ச காலத்தை எனக்காக சந்தோஷமாக கழிக்க நினைக்கிறேன். அதனால் நான் ராதிகாவை கல்யாணம் பண்ணிக்கப் போறது உறுதி என சொல்கிறார். இதனால் ஆத்திரமடையும் ஈஸ்வரி, கல்யாணமான பையன், கல்யாண வயசுல ஒரு பையன், வயசுக்கு வந்த ஒரு பொண்ணு  இருக்குறப்ப தெல்லாம் தேவையா?..நீ வீட்டுக்கு வா என சொல்ல கோபி மறுக்கிறார். 

கோபியிடம் சவால் விடும் ஈஸ்வரி 

எனக்கு கல்யாணமானாலும் இனியாவுக்கும் இந்த குடும்பத்துக்கும் செய்ய வேண்டிய எல்லாத்தையும் சரியா செய்வேன் என சொல்ல, நீ வீட்டுக்குள்ள இருந்து செஞ்சா அது சரி..இப்படி வெளியே இருந்தா செஞ்சா அசிங்கம் என ஈஸ்வரி தெரிவிக்கிறார். அப்படிப்பட்ட அசிங்கமான பணம் எங்களுக்கு தேவையில்லை எனவும் கூறுகிறார். உடனே கோபி நீங்கள் கண்டிப்பாக கல்யாணத்துக்கு வந்து எங்கள ஆசீர்வாதம் பண்ணனும் என சொல்ல, நான் எப்படி இந்த கல்யாணம் நடக்குதுன்னு பாக்குறேன் என சவால் விட்டு ஈஸ்வரி கோபத்துடன் அங்கிருந்து செல்கிறார். ஈஸ்வரியின் பேச்சால் டென்ஷனாகும் கோபி, என்ன நடந்தா என்ன..நான் அம்மாவிடம் சொல்லிட்டேன் என தனக்குத்தானே சமாதானம் சொல்லி கொள்கிறார். 

இன்னொரு பக்கம் பாக்யா கல்யாண ஆர்டருக்காக வீட்டில் ஜெனி, செல்வியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஈஸ்வரி கோபியின் திருமணம் பற்றி மறைமுகமாக பேசுகிறார். ஆனால் பாக்யாவோ குடும்பத்துக்காக உழைக்க வேண்டி இருப்பதாக சொல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget