Baakiyalakshmi: இன்னும் என்னென்ன குடுத்து வைச்சு இருக்க... வீடேறி வந்து பாக்கியாவை அவமானப்படுத்தும் கோபி... பாக்கியலட்சுமியில் இன்று!
Baakiyalakshmi Sep 21 episode : பாக்கியாவை வீடேறி வந்து அவமானப்படுத்துகிறார் கோபி. கணேஷ் அமிர்தாவையும், நிலாவையும் நினைத்து கவலைப்படுகிறான் கணேஷ். இன்றைய பாக்கியலட்சுமியில் என்ன நடக்கிறது?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியா கோபி ஆபிஸுக்கு வருகிறாள். அங்கே வேலை செய்பவர் பாக்கியாவை "வெயிட் பண்ணுங்க நான் உள்ளே போய் சார் கிட்ட சொல்லிட்டு வரேன்" என சொல்கிறார். உள்ளே சென்று "உங்க மனைவி வந்து இருக்காங்க" என சொல்ல கோபி வந்திருப்பது ராதிகா என நினைத்து "ஏன் வெளிய வெயிட் பண்ண சொன்ன. உள்ள வர சொல்லு" என சொல்கிறார். உள்ளே செல்ல பாக்கியா எக்ஸ்க்யூஸ் மீ என கேட்டதும் அதிர்ச்சி அடைகிறார் கோபி.
"இங்க எதுக்கு வந்த?" என கோபமாக கேட்க "உங்க பொண்ணையும் அம்மாவையும் பத்திரமா வீட்டுக்கு கொண்டு வந்து சேத்துட்டேன். அதை சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்" என்கிறாள் பாக்கியா. "நீ கூட்டிட்டு போன அழகு தான் தெரியுமே" என்கிறார் நக்கலாக. பாக்கியாவை மட்டம் தட்டுவது போலவே கோபி பேச "நாங்க எல்லாரும் மறுபடியும் பெரிய ட்ரிப் நிச்சயம் போவோம் " என சொல்லி கோபியை வெறுப்பேத்திவிட்டு பாக்கியா செல்கிறாள். கடுப்பான கோபி அவள் பேசியதை நினைத்து புலம்புகிறார்.
கணேஷ் நிலாவின் போட்டோவை போனில் பார்த்து அழுது புலம்புகிறான். அப்போது அவனுடைய அப்பா அம்மா வர "நான் அமிர்தாவை பார்க்கணும்" என்கிறான். "அது தான் நாங்க விசாரிச்சுட்டு சொல்றோம்னு சொன்னோம்ல பா" என்கிறார்கள்.
"நான் வந்ததில் இருந்து இதையே தான் சொல்றீங்க. அமிர்தாவுக்கு ஏதாவது பிரச்சனையா? ஏன் அமிர்தாவை என்னோட கண்ணுல காட்டவே மாட்டேங்குறீங்க. நான் செத்து பிழைச்சு வந்திருக்கேன். புரிஞ்சுக்கோங்க..." என சொல்லிவிட்டு சொல்கிறான். "இன்னும் எத்தனை நாட்கள் தான் நாம இப்படியே சமாளிக்கிறது" என புலம்புகிறார் கணேஷின் அம்மா.
கோபி காரில் வந்து இறங்குகிறான். திடீரென யோசித்து பாக்கியாவோட வீட்டுக்கு போகிறார். அங்கே வந்து பாக்கியா அவருடைய ஆபிஸுக்கு வந்து பிரச்சினை செய்ததை பற்றி ராமமூர்த்தி ஈஸ்வரியிடம் சொல்லி திட்டுகிறார். "இங்கீலிஷ் கிளாசுக்கு போனதே ஊர் சுத்துறதுக்கு தானே. உன்னோட லைசென்ஸ் எப்படி பழனிசாமிகிட்ட போச்சு" என கேட்கிறான். "நாங்க உங்களோட விஷயத்துல தலையிடுறேனா? உங்க வீட்டுக்கு யாரு வராங்க போறாங்கனு கணக்கு பாக்குறோமா ? உங்களுக்கு எதுக்கு இந்த வேலை?" என்கிறாள் பாக்கியா.
"இவ மட்டும் தனியா இருந்தா எந்த பிரச்சினையும் இல்ல. அப்போ நான் ஏன் இந்த கேள்வி எல்லாம் கேட்டிட்டு இருக்க போறேன். என்னோட பொண்ணு இந்த வீட்ல இருக்கா.. கண்ட ஆளும் வந்து போறதை என்னால அனுமதிக்க முடியாது. அடிக்கடி அந்த ஆளோட வண்டி நம்ம வீட்டுக்கு வாசலில் நின்னுகிட்டு இருக்கு. இன்னும் வேற என்னெல்லாம் அந்த ஆளுகிட்ட குடுத்து வைச்சிருக்க?" என்கிறார் கோபி அத்துடன். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.