Baakiyalakshmi : கோபியின் சாயம் வெளுத்து போச்சு... உண்மையை அறிந்த ராதிகா... கொந்தளித்த எழில்... இன்றைய பாக்கியலட்சுமியில்
Baakiyalakshmi September 19 : கோபி தான் பாக்கியாவின் லைசென்ஸை திருடியது என பழனிச்சாமி மூலம் தெரிந்து கொண்ட எழில், ராதிகாவிடம் உண்மையை சொல்லி ஷாக் கொடுக்கிறான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் இனியாவுக்கு போன் செய்து "அம்மாவை பயப்பட வேண்டாம்னு சொல்லு. என்னோட பிரெண்டோட அப்பா போலிஸ்ல தான் இருக்காரு. அவருக்கிட்ட ஹெல்ப் கேக்குறேன்" என எழில் சொல்ல "அதெல்லாம் தேவையில்லை, பழனிச்சாமி அங்கிள் அம்மாவோட லைசென்ஸ் காபியை அனுப்பிவைச்சாரு அதோட அம்மா மேல எந்த தப்பு இல்லனு சிசிடிவி கேமரா பார்த்து தெரிஞ்சுடுச்சு. நாங்க எல்லாரும் பத்திரமா வந்துட்டு இருக்கோம்" என இனியா சொல்ல எழிலுக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதை ராமமூர்த்தியிடமும் அமிர்தாவிடமும் சொல்கிறான் எழில். அவர்களுக்கும் நிம்மதியடைகிறார்கள்.
பாக்கியாவும் மற்றவர்களுக்கும் ட்ரிப் பற்றி பேசி கொண்டு வருகிறார்கள். அப்போது ஈஸ்வரி தலை வலிக்கிறது.. காபி குடிச்சா நல்லா இருக்கும் என சொல்லி ஒரு இடத்தில் இறங்கி ரிலாக்ஸ் செய்து கொள்கிறார்கள். அப்போது ஈஸ்வரி பாட்டு போட சொல்ல அனைவரும் ஜாலியாக என்ஜாய் செய்து கொண்டு வருகிறார்கள்.
எழில் பழனிச்சாமிக்கு போன் செய்து நன்றி சொல்லி நேரில் வந்து சந்திக்கிறேன் என சொல்கிறான். அப்போது எழில் "ரொம்ப நன்றி சார். அம்மாவோட லைசென்ஸ் எப்படி உங்க கிட்ட வந்தது அம்மா உங்ககிட்ட குடுத்துவைச்சு இருந்தாங்களா?" என கேட்கிறான் எழில். "அவங்க லைசென்ஸ் எப்படி என்கிட்டே இருக்கும்? என எதையோ சொல்லி சமாளிக்கிறார். எழில் "நான் சினிமாக்காரன் பாருங்க. நீங்க மறைக்க மறைக்க அதுல பெருசா ஏதாவது இருக்குமோனு தோணுது" என்கிறான். அப்போது பழனிச்சாமி தயங்கி தயங்கி நடந்ததை பற்றி சொல்கிறார். நீங்க கோபப்படுவீங்க என்றுதான் சொல்லல என்கிறார் பழனிச்சாமி. அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான் எழில்.
நேராக கிளம்பி ராதிகாவின் வீட்டுக்கு செல்கிறான் எழில். அங்கே ராதிகாவும் கோபியும் மாறி மாறி சாப்பாடு ஊட்டிக்கொள்கிறார்கள். எழில் வந்து கோபியை பார்த்து பயங்கரமாக கேள்வி கேட்க எதுவும் புரியாமல் ராதிகா "உங்க அம்மா லைசென்ஸ் காணாமல் போனதற்கு இவர் என்ன பண்ணுவாரு. அதுக்கு ஏன் நீ இங்க வந்து கத்துற" என கேட்கிறாள். எழில் நடந்த விஷயத்தை பற்றி ராதிகாவிடம் சொல்ல அவள் அப்படியே ஷாக்காகி விடுகிறாள். "எங்க அம்மா நல்லாவே இருக்க கூடாது என்பதற்காக இவர் எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவாரு. இது தான் அவருடைய கேரக்டர்" என சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான்.
மறுபடியுமும் பாக்கியா மேல் இருக்கும் கோபத்தில் ராதிகாவிடம் கத்த, ராதிகா கத்திவிட்டு ரூமுக்கு சென்று கதவை மூடி கொள்கிறாள். ட்ரிப் முடிந்து பாக்கியாவும் மற்றவர்களும் வீட்டுக்கு வந்து இறங்குகிறார்கள். செல்வி அவளுடைய வீட்டுக்கு கிளம்புகிறாள். பாக்கியா செழியன் பற்றி விசாரிக்க, அமிர்தா, ”அவர் வீட்டுக்கு வரவில்லை. அப்படி வந்தாலும் லேட்டா தான் வரார். சாப்பிடுறது கூட கிடையாது" என சொல்ல பாக்கியா சந்தேகப்படுகிறாள். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.