Baakiyalakshmi July 15th episode : பாக்கியலட்சுமி இல்லம் நேம்-போர்டு வந்தாச்சு... சபதம் போடும் ராதிகா... இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
* பாக்கியலட்சுமி பெயரில் வீட்டு பதியப்பட்டது* பாக்கியவை கேன்டீனில் இருந்து விரட்டுவேன் சபதமிடும் ராதிகாஇன்றைய பாக்கியாலட்சுமி எபிசோடில் என்ன நடக்கிறது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி, பாக்கியலட்சுமி மற்றும் எழில் ஒரு பக்கம் ரிஜிஸ்டர் ஆபீஸில் காத்திருக்க கோபியும் அங்கே காத்திருக்கிறார். கோபி முகத்தில் கோபம் தாண்டவமாடுகிறது. மீண்டும் ஒரு முறை பாக்கியா "மாமா உங்கள் பேரிலேயே வீட்டை மாத்தி எழுதிடலாம்" என சொல்ல "இல்ல வேண்டாம் மா திரும்பவும் எனக்கு சொத்துல பங்கு இருக்கு என்று வந்து நிற்பான். வயசான காலத்துல வீடு உன் பேர்ல இருந்தா தான் உனக்கு ஒரு பிடிப்பு இருக்கும்" என சொல்கிறார் மாமனார்.
பிறகு ரிஜிஸ்டர் அழைக்க அங்கே அனைவரும் சென்று அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க, கோபியிடம் இருந்து வீட்டு பாக்கியலட்சுமி பெயரில் எழுதி வாங்கப்படுகிறது. வெளியில் வந்த எழில் இனிமே உங்களுக்கும் அந்த வீட்டுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எதையும் காரணம் காட்டி அங்கே வந்து நிற்காதீர்கள் என்கிறான்
எழில் பாக்கியலட்சுமி இல்லம் என்ற நேம் போர்டு வாங்கி வந்து மாட்டுகிறான். அப்போது கூட பாக்கியா, உங்க எல்லாரோட பெயரையும் எழுதின மாதிரி போர்டு வாங்கி மாட்டு என்கிறாள். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது ராதிகாவும் கோபியும் இதை பார்த்து கொந்தளிக்கிறார்கள். அவர்களை பார்த்த பாக்கியா வெறுப்பேத்துவதற்காக நேம் போர்டு பக்கத்தில் நின்று கொண்டு போட்டோ எடுக்க சொல்கிறாள். இதை பார்த்து நொந்து போன ராதிகாவும் கோபியும் அங்கிருந்து சென்று விடுகிறார்கள்.
அமிர்தாவை பார்க்க அவளின் முன்னாள் மாமனார் மற்றும் மாமியார் வீட்டுக்கு வருகிறார்கள். சந்தோஷமாக அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நிலா பாப்பா தாத்தாவை பார்த்த சந்தோஷத்தில் மிகவும் ஜாலியாக இருக்கிறாள். கேன்டீனில் ஞாபக மறதியாக உணவை மாற்றி பரிமாறிய செல்வியை பார்த்து சத்தம் போடுகிறாள் ராதிகா. அருகில் இருந்தவர் தெரியாமல் தானே செய்தார் விட்டுவிடுங்கள் என ராதிகாவை சமாதானம் செய்தாலும் அடங்காத ராதிகா பயங்கரமாக பேசுகிறாள்.
பாக்கியா வந்து இனிமேல் இது போன்ற தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன் என சொன்னாலும் கோபம் குறையாத ராதிகா ”என்னை எப்படி ஒவ்வொரு நாளையும் எண்ணி வீட்டை விட்டு வெளியே அனுப்புனீர்களோ அதே போல இந்த கேன்டீனை விட்டு நான் உங்களை வெளியில் அனுப்புவேன். நீங்களும் இனிமேல் எத்தனை நாட்களுக்கு இங்கே இருக்க போகிறீர்கள் என்பதை எண்ணி கொண்டே இருங்கள்” என சபதம் போடுகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.