Anna Serial: முழுசாக புரிந்து கொண்ட பரணி.. அதிர்ச்சி கொடுத்த சண்முகம் - அண்ணா சீரியல் இன்றும் நாளையும்!
கார்த்திக் தப்பானவன் என்ற விஷயம் தெரிய வருகிறது. அதனால் தான் சண்முகம் கல்யாணத்தை நிறுத்தினான் என்ற உண்மையும் தெரிய வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி இசக்கி முத்து பாண்டி சாந்தி முகூர்த்தத்துக்காக நாள் குடிக்க வந்ததாக ஜோசியர் சொல்லிவிட, சண்முகம் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது முதலில் சண்முகம் வெட்டுக்கிளியுடன் பரணி அப்படி பண்ணி இருக்க வாய்ப்பில்லை என்று சொல்ல, வீட்டுக்குள்ளே "அண்ணி அப்படி பண்ணியிருக்கலாம், முத்துப்பாண்டி அண்ணியோட அண்ணன் என்பதால் செய்திருக்க வாய்ப்பிருக்கு" என்று சொல்ல, சண்முகம் பரணியை தப்பாக புரிந்து கொண்டு ஆவேசப்படுகிறான்.
மறுபக்கம் சௌந்தர பாண்டி வீட்டில் இசக்கி விளக்கேற்றுவதற்காக விளக்கை எடுக்கச் செல்லும் பரணி முத்துப்பாண்டி ரூமில் டாக்டர் என்ற பெயரில் ஒரு பென்டிரைவ் இருப்பதைப் பார்த்து அதை எடுத்து ஓபன் செய்து பார்க்க, கார்த்திக் தப்பானவன் என்ற விஷயம் தெரிய வருகிறது. அதனால் தான் சண்முகம் கல்யாணத்தை நிறுத்தினான் என்ற உண்மையும் தெரிய வருகிறது.
சண்முகத்தை முழுசாக புரிந்துகொள்ளும் பரணி தனது தவறை உணர்ந்து “இனிமே அவனோடு நல்லபடியா வாழனும்” என முடிவெடுக்கிறாள். பிறகு பரணி சண்முகத்தை பார்க்க கிளம்பி வருகிறாள். மறுபக்கம் வீட்டுக்கு வந்த சண்முகம், “பரணி தான் எல்லாத்துக்கும் காரணம், “அவ இந்த வீட்ல இருந்துகிட்டு அவர் குடும்பத்துக்கும் அவ அண்ணனுக்கும் உதவி சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணி இருக்கா, இனிமே அவ இந்த வீட்ல ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது” என்று சண்முகம் சொல்ல வைகுண்டம் மற்றும் வீட்டில் உள்ள மற்றவர்கள் பரணி அப்படி செஞ்சிருக்க வாய்ப்பில்லை என சொல்கின்றனர்.
ஆனாலும் எதையும் கேட்காத சண்முகம், அவர் துணிமணி எல்லாம் எடுத்து வெளியே போட சொல்கிறான். பிறகு சிவபாலனுடன் பரணி கோயிலில் “சண்முகத்தினை தப்பா புரிஞ்சுக்கிட்டேன், அவனை ரொம்பக் கஷ்டப்படுத்தி இருக்கேன்” என்று வேண்டுகிறாள். சிவபாலன் “இசக்கிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் முத்துப்பாண்டியை எதிர்த்து நான் நிற்பேன்” என்று கூறுகிறான்.
பிறகு பரணி வீட்டுக்கு வர தடுத்து நிறுத்தும் சண்முகம் நீ முத்துப்பாண்டிக்காக உதவி செய்திருக்க சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறித்து இருக்க, என்று சொல்ல பரணி அதிர்ச்சி அடைந்து நிற்கிறாள். “இனிமே உனக்கு இந்த வீட்ல இடம் இல்லை” என்று சண்முகம் சொல்ல, பரணி அதை காதில் வாங்காமல் வீட்டுக்குள் வந்து ரூமுக்குள் அவனை நெருங்கி சென்று “இனிமே நல்ல வாழ்க்கை வாழலாம்” என்று மறைமுகமாக சொல்ல சண்முகம் விலகி செல்கிறான். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.