Alya Manasa : "என்ன பண்ணி வச்சு இருக்க.." : ஆலியாவின் கணவர் சஞ்சீவ் எப்படிப்பட்டவர் தெரியுமா?
Alya Manasa : சீரியலில் மற்ற நடிகர்களுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும்போது, சஞ்சீவ் எப்படி ரியாக்ட் செய்வார் என சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் தெரிவித்து இருந்தார்.
வெள்ளித்திரை பிரபலங்களை காட்டிலும் சூப்பர் ஃபாஸ்ட் ஜெட் ஸ்பீடில் பிரபலமடைந்து விடுகின்றனர் சின்னத்திரை நடிகர் நடிகைகள். அப்படி ஏராளமான ரசிகர்களை தனது வசீகரமான தோற்றம், கொஞ்சல் பேச்சு, துறுதுறுப்பான நடிப்பால் ஈர்த்தவர் நடிகை ஆலியா மானசா. அறிமுகமான முதல் சீரியலிலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
செம்பாவாக அறிமுகம் :
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் செம்பாவாக அறிமுகமான ஆலியா மானசா அந்த சீரியலில் அவரின் ரீல் ஜோடியாக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மிகவும் சந்தோஷமான இந்த தம்பதிக்கு அய்லா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் உள்ளனர்.
சன் டிவியில் ரீ என்ட்ரி :
இரண்டாவது டெலிவரிக்காக விஜய் டிவியில் அவர் நடித்து வந்த ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிய ஆலியா மானசா குழந்தை பிறந்தவுடன் சன் டிவியில் தொடங்கப்பட்ட இனியா என்ற புதிய சீரியலில் கதாநாயகியாக ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த சீரியல் டி. ஆர். பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த தொடரில் கூட்டு குடும்பத்தில் இருக்கும் இனியா பெண் அடிமைத்தனம் செய்யும் தனது மாமனாரை எதிர்த்து செயல்பட்டு வரும் மருமகளாக நடித்துள்ளார். இந்த சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இனியா தொடரில் ஆலியா மானசாவின் கணவராக நடிகர் ரிஷி நடித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் மற்ற நடிகர்களுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும்போது கணவர் சஞ்சீவ் எப்படி அதற்கு ரியாக்ட் செய்வார் என்பதை சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
சஞ்சீவ் ரியாக்ஷன் :
மற்ற கணவர்களை போலவே தனது கணவரும் மிகவும் பொசசிவ்வானவர். சீரியலில் ரொமான்ஸ் காட்சிகளை பார்த்தால் ”என்ன நீ பண்ணி வச்சு இருக்க” என லுக் விட்டுட்டு போய்விடுவாராம். இருந்தாலும் அவர் மிகவும் நல்லவர். இருவரும் ஒரே இண்டஸ்ட்ரியில் இருப்பதால் இந்த சூழ்நிலையை அவர் புரிந்து கொள்வார் என தெரிவித்துள்ளார் ஆலியா மானசா. நடிகர் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலின் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தும் இந்த தம்பதிகள் அவர்களின் குடும்ப நிகழ்வுகள், வெகேஷன், குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட வீடியோ என போஸ்ட் செய்து ரசிகர்களை என்றுமே என்டர்டெயின் செய்து வருகிறார்கள். இவர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.