Archana - Arun Prasad: கிசுகிசு உண்மை தானா? ஜோடியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ச்சனா - அருண் பிரசாத்
Archana and Arun prasad : பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா மற்றும் சின்னத்திரை நடிகர் அருண் பிரசாத் இருவரும் ஜோடியாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
டிக் டாக் மூலம் பிரபலமான பலரும் இன்று பிரபலமான செலிபிரிட்டிகளாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமானதன் மூலம் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் வாய்ப்பு வந்தது. வி.ஜேவாக கலக்கி வந்த அர்ச்சனாவுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஃபேவரட் சீரியல் 'ராஜா ராணி 2'வில் முக்கியமான கேரக்டரில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்ட அர்ச்சனா தன்னுடைய அசத்தலான நடிப்பு, அட்டகாசமான பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவிரி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
'ராஜா ராணி 2 ' சீரியலில் நெகட்டிவிட்டி அதிகமானதனால் பல கசப்பான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகினார். அவர் விலகளுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது தான் காரணம் என கூறப்பட்டது. ஆனால் சரியான வாய்ப்பு அமையாததால் சினிமாவில் அர்ச்சனாவை பார்க்க முடியாத ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் தான் அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த அர்ச்சனா பல எதிர்ப்புகளை கடந்து மிகவும் உறுதியாக போராடினார். பிக் பாஸ் நிகழ்ச்சி அர்ச்சனாவின் பிரபலத்தை பல மடங்காக எகிறவைத்தது. எத்தனை நெகட்டிவ் விமர்சனங்கள், எதிர்ப்புகள் வந்தாலும் அவை அனைத்தையும் மிகவும் துணிச்சலாக எதிர்கொண்டு பைனல் மேடை வரை தாக்குப்பிடித்து கடைசியில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தையும் கைப்பற்றினார்.
அர்ச்சனாவுக்கும், பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி கேரக்டரில் நடித்ததன் மூலம் பிரபலமான அருண் பிரசாத்தும் பல காலமாக காதலித்து வருகிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இது குறித்து இரு தரப்பினரும் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இருந்து வந்தனர். ஆமாம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் அமைதி காப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அர்ச்சனாவை போலவே அருண் பிரசாத்துக்கு எக்கச்சக்கமாக ஃபேன் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். இந்நிலையில் அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் சேர்ந்து நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பித்தனர். ஆனால் அது என்ன நிகழ்ச்சி என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இது அவர்களின் காதல் கிசுகிசுவை மேலும் தூண்டியுள்ளது. இதனால் அவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விரைவில் அர்ச்சனா - அருண் பிரசாத் இடையே இருக்கும் உறவு பற்றி பொதுவில் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.