" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
விஜய் எப்போதும் என்னோட ஹார்ட்டோட இருக்கனும்னு ரொம்ப ஆச என்று விஜயின் உருவத்தை நடிகர் தாடி பாலாஜி தன் தன் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார்

தவெக தலைவர் விஜய்
நடிகர் விஜய் தவெக கட்சி ஆரம்பித்த உடனே அவருடைய கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் தாடி பாலாஜி. அதோடு தவெக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் தாடி பாலாஜி தன்னுடைய நெஞ்சில் விஜயின் உருவத்தை டாட்டூ போட்டு இருக்கிறார்.
தாடி பாலாஜி நெஞ்சில் விஜய் டாட்டூ
இந்த டாட்டூ போதுவதற்கு ஏழு மணி நேரம் வலியை தாங்கிக் கொண்டார் தாடி பாலாஜி. "வலியை தாண்டி இந்த டாட்டூ போடும்போது எனக்கு ஒரு சந்தோஷம் கிடைத்தது.விஜய் என்னுடைய நண்பர்.. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் போட்டாவை நெஞ்சில் குத்தி இருக்கிறோம் என்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. என் நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் தலைவா.. என்று விஜய்யின் போட்டோவுக்கு கீழே எழுதப்பட்டிருக்கிறது. ஒருவேளை விஜய் இதை கேள்விப்பட்டு என்னை பார்க்க வர சொன்னால் நான் போய் பார்ப்பேன்.
இப்போது இருக்கும் இந்த வலி அவர் கூட நிற்கும்போது தெரியாது. இதை பார்த்தால் அழகாய் இருக்கு எப்படி எங்கே போட்டீங்கன்னு கேட்பாரு.. அதைத் தாண்டி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கணுமானு கேட்பாரு.சும்மா சட்டையில் போட்டு கழட்டிட்டு வேற சட்டை போட்டுக்கறதுக்கு சட்டைல அவரோட உருவத்தை நிறைய பேரு குத்துறாங்க.
Actor & #TVK Member Thaadi Balaji Tattooed Vijay on his chest 😭🔥@tvkvijayhq @Jagadishbliss
— Athiyaman Balaji (@AthiyamanBalaji) December 13, 2024
pic.twitter.com/ZWYsmia0T0
அதைத் தாண்டி யூனிக்கா டிஃபரண்டா இருக்கணும்னு நான் நெனச்சேன். அவர் எப்போதும் என்னுடைய ஹார்ட்டோட இருக்கணும்னு நினைக்கிறேன்.அதுபோல முதலில் என்னுடைய மகளோட பெயரை குத்தி இருக்கிறேன். இந்த பக்கம் வீட்டில் அவர்களுடைய பெயரை குத்தி இருக்கிறேன். அப்போ இருந்த சந்தோஷம் வேற... ஆனால் இப்போது பயங்கர சந்தோஷமா இருக்கிறேன் நான் சாகுற வரையும் அவர் என்கூடவே இருப்பார்”என்று தாடி பாலாஜி கூறியிருக்கிறார். தாடி பாலாஜியின் இந்த செயல் தவெக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க : Rashmika Mandana : முருகதாஸ் படம் சுமாரா தான் இருக்கும்...என்ன ராஷ்மிகா இப்டி சொல்லிட்டாங்க
நீங்க காதல் பண்ண அரசு பில்டீங் தான் கிடைச்சதா... விக்னேஷ் சிவன் செய்த செயலை பாருங்கள்




















