Tamil TV Serial TRP Rating: டி.ஆர்.பி. ரேட்டிங்கில் அதிரடி.. நம்பர் 1 இடத்தில் கயல்.. அடுத்தடுத்து இந்த சீரியல்கள்தான்..
தொலைக்காட்சி தொடர்களுக்கான டி.ஆர்.பி. ரேட்டிங்கில் கயல் சீரியல் நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
![Tamil TV Serial TRP Rating: டி.ஆர்.பி. ரேட்டிங்கில் அதிரடி.. நம்பர் 1 இடத்தில் கயல்.. அடுத்தடுத்து இந்த சீரியல்கள்தான்.. Tamil TV Serial TRP Rating Sun TV Kayal 1st in List, bhagyalakshmi serial moved up to 5th Place Check Full List Tamil TV Serial TRP Rating: டி.ஆர்.பி. ரேட்டிங்கில் அதிரடி.. நம்பர் 1 இடத்தில் கயல்.. அடுத்தடுத்து இந்த சீரியல்கள்தான்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/14/8a19b23d2e8bdcfa1fa816a9cdc3328f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் திரைப்படங்களுக்கு எந்தளவு ரசிகர்களின் ஆதரவு உள்ளதோ, அதே அளவு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடர்களுக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறும்.
தமிழ்நாட்டில் தற்போதுள்ள தொலைக்காட்சி தொடர்களில் விஜய் தொலைக்காட்சிக்கும், சன் தொலைக்காட்சிக்கும்தான் யார் அதிக ரசிகர்களை கொண்ட சீரியலை ஒளிபரப்புவது என்ற போட்டி நிலவிக்கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் வெளியான டி.ஆர்.பி. ரேட்டிங் தமிழ்நாட்டில் சன் தொலைக்காட்சியின் சீரியல்களுக்கே அதிக ரசிகர்கள் என்று நிரூபித்துள்ளது. சன் டிவியில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் கயல் தொடர்தான் தற்போது நம்பர் 1 சீரியலாக டி.ஆர்.பி. ரேட்டிங்கில் இடம்பெற்றுள்ளது. 10.75 சதவீதத்துடன் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. டி.ஆர்.பி. ரேட்டிங்படி சீரியல்கள் பட்டியல் :
- கயல் - சன் டிவி - 10.75
- சுந்தரி - சன் டிவி – 9.54
- வானத்தை போல - சன் டிவி – 9.42
- ரோஜா - சன் டிவி – 9.21
- கண்ணான கண்ணே – சன் டிவி – 8.97
- பாரதி கண்ணம்மா - விஜய் டிவி – 8.71
- பாக்கியலட்சுமி - விஜய் டிவி – 8.51
- பாண்டியன் ஸ்டோர் - விஜய் டிவி – 8.32
- ராஜா ராணி 2 - விஜய் டிவி – 7.76
- எதிர்நீச்சல் - சன் டிவி - 6.79
- அபியும் நானும் - சன் டிவி - 5.94
- அன்பே வா - சன் டிவி - 5.87
- தமிழும் சரஸ்வதியும் - விஜய் டிவி – 5.85
- அருவி - சன் டிவி - 4.69
- மௌன ராகம் 2 - விஜய் டிவி – 4.33
கயல் தொடர் ஒளிபரப்பாகியது முதலே தமிழில் நம்பர் 1 டி.ஆர்.பி. ரேட்டிங்குடன் உலா வருகிறது. நடுத்தர வர்க்கத்து குடும்பத்து கதை, நாயகன் – நாயகி காம்போ, கதாபாத்திரங்கள் தேர்வு, கதைக்களம் ஆகியவை கயல் தொடருக்கு மிகப்பெரிய பக்கபலமாக உள்ளது. அதேபோல, சிகப்பழகு நாயகிகளை சுற்றியே பின்னப்பட்டிருக்கும் கதைக்களத்தை மாற்றி கிராமத்து நிறமான கருமை நிற அழகியான சுந்தரியை நாயகியாக்கி நகரும் கதைக்களம் சுந்தரிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.
இந்த பட்டியலில் சித்தி 2 சீரியல் இடம்பெறாதது அந்த குழுவினருக்கு மிகப்பெரிய பின்னடைவாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் 5 இடங்களுக்குள் வர முடியாததும் அந்தந்த தொடரின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)