Watch video : 'வாழ்ந்தே பார்த்திடலாம்'... வசனத்துடன் கடற்கரையில் வலம்வந்த ரக்ஷிதா... உருகிய ரசிகர்கள்!
ரக்ஷிதா தமிழில் முதலில் 2011ஆம் ஆண்டு “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
![Watch video : 'வாழ்ந்தே பார்த்திடலாம்'... வசனத்துடன் கடற்கரையில் வலம்வந்த ரக்ஷிதா... உருகிய ரசிகர்கள்! Tamil serial actress rachitha mahalakshmi recent instagram video goes viral Watch video : 'வாழ்ந்தே பார்த்திடலாம்'... வசனத்துடன் கடற்கரையில் வலம்வந்த ரக்ஷிதா... உருகிய ரசிகர்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/31/1e95b710c74ae0c3c307a996488af191_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்நாடகாவைச் சேர்ந்த ரக்ஷிதா, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியாபுரம் சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். பின்னர் சீரியலில் இருந்து சினிமாவுக்கும் தாவினார். சில தமிழ் திரைப்படத்திலும், கன்னட திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார் ரக்ஷிதா.
View this post on Instagram
தற்போது, இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடிக்கிறார். இந்த சீரியலில் கணவனை இழந்து இரு பிள்ளைகளை தனி ஆளாக வளர்க்கும் தாய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரக்ஷிதா தமிழில் முதலில் 2011ஆம் ஆண்டு “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், திருமண வாழ்க்கையில் விரிசல் விழுந்துள்ளதாகவும் செய்திகள் பரவி வந்தது. தற்போது இவர்கள் இருவரும் தனித்தனியே வாழ்ந்தும் வருகின்றனர். இந்தநிலையில், சீரியல் நடிகை ரக்ஷிதா கடலில் காலாற நடந்து செல்லும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் கீழ் "வாழ்ந்தே பார்த்திடலாம்" என்ற வசனத்துடன் நெற்றிக்கண் திரைப்படத்தில் வரும் இதுவும் கடந்து போகும் பாடலை இணைத்துள்ளார்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)