Chinmayi, Samantha : சமந்தாவும், சின்மயியும் இணைந்த ஈவண்ட்.. நியூ அப்டேட்..
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பின்னணி பாடகி சின்மயியும், நடிகை சமந்தாவும் இணைந்து பங்கேற்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை சமந்தா. தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு போன்ற முன்னணி நடிகர்கள் மட்டுமின்றி சிவகார்த்திகேயன், அதர்வா, ஜீவா போன்ற பல இளம் கதாநாயகர்களுடனும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜூனாவின் மகனும், முன்னணி நடிகருமாகிய நாக சைதன்யாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த சமந்த, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரை விவகாரத்து செய்தார். சமந்தா- நாக சைதன்யா விவகாரத்து விவகாரம் திரையுலகினர் மட்டுமின்றி, அவர்களது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விவகாரத்திற்கு பின்பு சமந்தா பல்வேறு ஆன்மீக சுற்றுலா தளங்களுக்கும், விழாக்களுக்கு செல்வதிலும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும் அதிகளவில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த நிலையில், நடிகை சமந்தா இன்று சென்னையில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நடிகை சமந்தாவுடன் இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகி சின்மயியும் பங்கேற்றார். இருவருக்கும் அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாடகி சின்மயியும், நடிகை சமந்தாவும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வரவேற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தாவும், சின்மயியும் புதிய கருவிகளை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தனர். பின்னர், சமந்தா கேக் வெட்டினார்.
நடிகை சமந்தா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நயன்தாராவும் இணைந்து நடித்து வருகிறார். அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுகிறார். தற்போது இந்தியிலும் சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சகுந்தலம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். அது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. மேலும், தெலுங்கில் பிக்பாஸ் 4 சீசன் மற்றும் சம்ஜம் என்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க : Watch Video: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இசையின் ராஜா! இன்னொரு மைல்கல்.. 🔥 Fire விடும் ரசிகர்கள்..
மேலும் படிக்க : Watch Video - Bharathi Kannamma | விவாகரத்து கொடுக்காத நீதிமன்றம்.. கடுப்பில் பாரதி.. திட்டம் போடும் கண்ணம்மா.. !
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்