Is Vijay Sethupathi in Vikram | விக்ரம் படத்தில் வில்லனாக இணைகிறாரா விஜய்சேதுபதி?
லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை இயக்கும் விக்ரம் படத்தில் வில்லனாக இணைகிறார் விஜய்சேதுபதி .

சினிமா துறையில் மிகவும் பரபரப்பான நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, தேதி பிரச்சினைகள் காரணமாக நடிகர் பல படங்களில் இருந்து விலகியுள்ளார். கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முன்னர் செய்தி வெளியானது. தற்பொழுது விஜய் சேதுபதி 'விக்ரம்' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது . விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன .

கொரோனா தாக்குதல் அதிகமாக இருப்பதால் திரைப்படம் மற்றும் நாடகம் ஷூட்டிங் மே 31 வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு எப்பொழுது தொடங்கும் என்னும் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்போம் .
வளர்ந்துவரும் இளம் இயக்குநர்கள் பட்டியலில் தனக்கென தனியிடத்தை தக்கவைத்துக்கொண்டார் லோகேஷ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், தன்னுடைய யதார்த்தமான இயக்கத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் வெகு சுலபத்தில் ஈர்த்தார். மாநகரம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ’கைதி’யை இயக்கினார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது.

பல ஆண்டுகளாக ரசிகனாக நடிகர் விஜயை ரசித்துவந்த லோகேஷ் ’மாஸ்டரை’ இயக்கி, கடந்த பொங்கலுக்கு வெளியிட்டார். இந்நிலையில் தனது திரையுலக பயணத்தில் அடுத்த மயில்கல்லாக கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கிவருகிறார். தேர்தல் முடிந்த கையோடு, கமல்ஹாசன் தற்பொழுது விக்ரம் படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கிவிட்டார் என்பது தெரிந்த அப்டேட்தான்.

படத்தில் ஃபகத் பாசில் இணைகிறார் என்று ஒரு நிகழ்ச்சி பேட்டியில் தெரிவித்திருந்தார் . ரசிகர்கள் இடையில் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்தப் பரபரப்பின் தொடர்ச்சியாக தற்பொழுது விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க போகிறார் என்ற செய்தி இணையத்தில் இன்று வைரலாக பரவியுள்ளது .

ஏற்கனவே விஜய் சேதுபதி மற்றும் கமல் இருவரும் இன்ஸ்டாகிராமில் கடந்த ஆண்டு கொடுத்த பேட்டி இன்னும் பலரால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்பொழுது இருவரின் காம்போ ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. உலக நாயகன், ஃபகத் பாசில், விஜய் சேதுபதி திரையில் இந்த ஜாம்பவான்களின் நடிப்பைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எப்பொழுது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் போன்ற எண்ணற்ற கேள்விகள் இன்று சமூகவலைதளங்களில் பேசப்படுகிறது. இதற்கிடையில், ஷங்கர் இயக்கும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.என்பது குறிப்பிடத்தக்கது .





















