மேலும் அறிய

KPY Bala: இல்லாதவர்களுக்கு உதவும் பாலா.. அவரின் வாழ்வை மாற்றிய தருணம் எது தெரியுமா?

ஒரு வாரம் ஊடகத்தில் வாய்ப்பு தேடுவோம். கிடைக்கவில்லை என்றால் திரும்ப படிக்க வந்துவிடுவோம் என நினைத்தேன். அந்த ஒரு வாரம் ஒரு மாதமாக மாறியது.

என்னை பொறுத்தவரை எல்லாரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பது தான் வேலையாக உள்ளது  என நடிகர் KPY பாலா தெரிவித்துள்ளார். 

உதவிக்கரம் நீட்டும் KPY பாலா

விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு', குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமானவர் பாலா. வித்தியாசமான தலைமுடி, உடல்மொழி என ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவும் பணியை பாலா செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிக்கு வீல்சேர் வாங்கி தந்தது, பெட்ரோல் போடும் பையனுக்கு புது பைக் வாங்கி தந்தது என பாலாவின் இந்த உதவிகள், அவரை கலியுக கர்ணன் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

வாழ்க்கையை மாற்றிய தருணம் 

ஒரு நேர்காணலில் பேசிய பாலா, “என்னை பொறுத்தவரை எல்லாரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பது தான் வேலையாக உள்ளது. அழுவுறது யார் வேண்டுமானாலும் செய்யாலும், சிரிக்க வைக்கிறது தான் கஷ்டம். வந்தோமா, வேலை செய்தமோ, காமெடி பண்ணோமா, காசை வாங்குனோமா என்பது தான் பாலாவின் ஸ்டைல்” என தெரிவித்தார். 

நான் வந்து படிக்கவில்லை. 12 ஆம் வகுப்பு வரை தான் படித்தேன். லயோலா கல்லூரியில் தான் படிப்பேன் என அடம் பிடித்தேன். வீட்டில் மிகவும் ஏழ்மை நிலை. கல்லூரி கட்டணம் ரூ.28 ஆயிரம் என்னால் கட்ட முடியவில்லை. சொந்தக்காரர்கள் தான் உதவினார்கள். நான் செகன்ட் ஷிஃப்டில் கல்லூரி போனேன். ஒருநாள் போகும்போது முதல் ஷிஃப்டில் வந்த பசங்க, பொண்ணுங்க எல்லாரையும் பார்க்கிறேன். மிகவும் வசதியாக இருக்கிறார்கள். நான் எல்லாரையும் ஜன்னல் வழியா பார்த்த அந்த நிகழ்வு தான் ஒட்டுமொத்த வாழ்க்கையும் திருப்பி போட்டது. 

நம்ம வீட்டில் வேறு கஷ்டமான சூழல் இருக்கும்போது இப்படியெல்லாம் வசதியாக வாழ முடியாது. கடன் வாங்கி தான் பீஸ் கட்டுறாங்க. அவங்க சாப்பிட்டார்களா? இல்லையா என்பது கூட தெரியவில்லை. சரி ஒரு வாரம் ஊடகத்தில் வாய்ப்பு தேடுவோம். கிடைக்கவில்லை என்றால் திரும்ப படிக்க வந்துவிடுவோம் என நினைத்தேன். அந்த ஒரு வாரம் ஒரு மாதமாக மாறியது. கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் ஊடகத்தில் வந்து விட்டேன். 

ஒருநாள் ஒரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் வரும்போது பெண் ஒருவரை சந்தித்தேன். அப்பெண் முடியை பசங்க மாதிரி வெட்டியிருப்பார். அவர் என்னிடம் வந்து, ‘என்னை சமுதாயம் ஒருமாதிரி பார்க்குது. எப்படி படிக்கணும்னே தெரியல’ என வருத்தப்பட்டார். எனக்கு பீஸ் கட்டணும், யாராவது உதவி செய்யிறவங்க இருந்தா சொல்லுங்க என சொன்னார்.நான் அப்போது 5 ஆயிரம் தான் சம்பளம் வாங்கி கொண்டிருந்தேன். கிட்டதட்ட 5,6 நிகழ்ச்சி போய் சம்பாதித்து அப்பெண்ணுக்கு பீஸ் கட்டினேன். அவரின் அம்மா என்னிடம் மகிழ்ச்சியாக பேசியது 5 ஆஸ்கர் விருது வாங்கியது மாதிரி இருந்தது. தொடர்ந்து உதவிகள் செய்ய தொடங்கினேன்” என KPY பாலா கூறியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை
எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை
Lowest Score T20: டி20 கிரிக்கெட்டில் வெறும் 12 ரன்களுக்குள் ஆல் அவுட்டான மங்கோலியா.. மோசமான சாதனை படைப்பு..!
டி20 கிரிக்கெட்டில் வெறும் 12 ரன்களுக்குள் ஆல் அவுட்டான மங்கோலியா.. மோசமான சாதனை படைப்பு..!
Breaking Tamil LIVE: அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழக அரசு புதிய சாதனை
Breaking Tamil LIVE: அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழக அரசு புதிய சாதனை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Thadi Balaji meets Chinnadurai : சாதித்து காட்டிய சின்னதுரை.. ஓடி வந்த தாடி பாலாஜிCow Baby Shower : ’’எங்க வீட்டு மகாலட்சுமி’’பசுவுக்கு வளைகாப்பு!அசத்திய தென்காசி தம்பதிRahul gandhi vs Modi : ’’முன் அனுபவம் உள்ளதா?’’அம்பானி அதானியுடன் டீல்?மோடிக்கு ராகுல் பதிலடி!Sam Pitroda Resigns : இனவெறி கருத்தால் சர்ச்சை..காங். தலைவர் ராஜினாமா !வலுக்கும் கண்டனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை
எலி விஷம் சாப்பிட்ட சிறுமிக்கு பிளாஸ்மா ஃபெரிசிஸ் சிகிச்சை அளித்து காப்பாற்றிய தஞ்சை மீனாட்சி மருத்துவமனை
Lowest Score T20: டி20 கிரிக்கெட்டில் வெறும் 12 ரன்களுக்குள் ஆல் அவுட்டான மங்கோலியா.. மோசமான சாதனை படைப்பு..!
டி20 கிரிக்கெட்டில் வெறும் 12 ரன்களுக்குள் ஆல் அவுட்டான மங்கோலியா.. மோசமான சாதனை படைப்பு..!
Breaking Tamil LIVE: அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழக அரசு புதிய சாதனை
Breaking Tamil LIVE: அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம்: தமிழக அரசு புதிய சாதனை
Thadi Balaji: சாதித்து காட்டிய மாணவன் சின்னதுரை: ஓடோடி வந்த  நடிகர் தாடி பாலாஜி
Thadi Balaji: சாதித்து காட்டிய மாணவன் சின்னதுரை: ஓடோடி வந்த நடிகர் தாடி பாலாஜி
Rashmika Mandanna: ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் ஹீரோயினாகும் ராஷ்மிகா மந்தனா.. யாருக்கு ஜோடி தெரியுமா?
ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் ஹீரோயினாகும் ராஷ்மிகா மந்தனா.. யாருக்கு ஜோடி தெரியுமா?
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. தமிழ்நாட்டில் எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
மும்பையில் அதிர்ச்சி! தொடர்ந்து விஷமாகும் உணவுகள்.. ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
மும்பையில் அதிர்ச்சி! தொடர்ந்து விஷமாகும் உணவுகள்.. ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
Embed widget