Tamannaah Bhatia: என்ன சிம்ரன் இதெல்லாம்... கல்யாண ஆசை காட்டி கடுப்பேத்திய நடிகை தமன்னா... ‘ஷாக்’ ஆன ரசிகர்கள்...
தமன்னா மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவத் தொடங்கின.
![Tamannaah Bhatia: என்ன சிம்ரன் இதெல்லாம்... கல்யாண ஆசை காட்டி கடுப்பேத்திய நடிகை தமன்னா... ‘ஷாக்’ ஆன ரசிகர்கள்... Tamannaah Bhatia introduces her business man husband in her instagram handle Tamannaah Bhatia: என்ன சிம்ரன் இதெல்லாம்... கல்யாண ஆசை காட்டி கடுப்பேத்திய நடிகை தமன்னா... ‘ஷாக்’ ஆன ரசிகர்கள்...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/91a3c056350f81a751230e0230831c401668652219400574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரை தமன்னா திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாடலிங் உலகில் நுழைந்து தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ‘சாந்த் சே ரோஷன் செஹரா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார் தமன்னா. 2006ஆம் ஆண்டு ‘கேடி’படத்தின் மூலம் தமன்னா தமிழ், தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.
ஆரம்ப காலத்தில் இவர் நடித்த சில படங்கள் வணிகரீதியாக தோல்வியுற்ற நிலையில், கல்லூரி படத்தின் மூலம் தனது நடிப்பால் கவனமீர்த்தார்.
View this post on Instagram
அதன் பின்னர் தனுஷ், சூர்யா, ராம் சரண், பிரபாஸ் என டாப் நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கி, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு சினிமாக்களின் டாப் நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார்.
இச்சூழலில் தமன்னா மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவத் தொடங்கின.
இந்நிலையில், தன் திருமணம் குறித்த செய்திகளுக்கு ரியாக்ட் செய்து தமன்னா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவு கவனமீர்த்துள்ளது.
முன்னதாக ஆண், பெண் வேடமிட்டு தான் நடித்த பிரபல இன்ஸ்டா ரீலை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ரீ - ஷேர் செய்துள்ள தமன்னா, எனது தொழிலதிலபர் கணவரை அறிமுகப்படுத்துகிறேன் எனக் கேலியாக பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமன்னாவுக்கு திருமணம் என மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து வந்த ரசிகர்கள் அவரது இந்தப் பதிவால் அப்செட் ஆகி, சோக முகத்துடன் வாழ்த்துகளை வாபஸ் வாங்கி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)