மேலும் அறிய

ஏசியன் அகாடமி விருதுகள் அறிவிப்பு: சிறந்த ட்ராமா சீரிஸ் விருதை பெற்றது ‛ சுழல்’

Asian Academy Creative Awards: ப்ரைம் வீடியோவில் வெளியான சுழல் சீரிஸ், ஏசியன் அகாடமி க்ரியேட்டிவ் விருதுகள் வழங்கும் தேசிய விருதினை பெற்றுள்ளது. 

ப்ரைம் வீடியோவில் வெளியான சுழல் சீரிஸ், சிறந்த ட்ராமா சீரிஸுக்கான ஏசியன் அகாடமி க்ரியேட்டிவ் விருதுகள் வழங்கும் தேசிய விருதினை பெற்றுள்ளது. 

விக்ரம் வேதா புகழ் புஷ்கர் காயத்ரி எழுத்தில் உருவாகியுள்ள சுழல் வெப்சீரிஸ் கடந்த ஜூன் 17 ஆம் தேதி வெளியானது.  வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இயக்கத்தில் உருவான சுழல் – தி வோர்டெக்ஸ் தொடர், தமிழ், ஹிந்தி,கன்னடம், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவந்தது. அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் தற்போது நடைபெற்று வரும் IIFA வீக்கெண்ட் 2022-இல் தமிழில் எடுக்கப்பட்ட அதன் முதல் லாங் ஃபார்ம் ஸ்கிரிப்ட் ஒரிஜினல் தொடரான சுழல்- தி வொர்டெக்ஸின் உலகளாவிய பிரீமியரை பிரைம் வீடியோ அறிவித்தது. டிடெக்டிவ் தொடரான சுழல் - தி வோர்டெக்ஸ், புஷ்கர் மற்றும் காயத்ரியால் படைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இத்தொடரை இயக்கியுள்ளனர். இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது எட்டு. எபிசோட்கள் கொண்ட தொடராக வெளியானது. இந்த க்ரைம் த்ரில்லர், இந்தியாவின் தென்பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரத்திலிருந்து காணாமல் போன பெண் குறித்த விசாரணையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட 240 நாடுகளில்   சுழல் - தி வோர்டெக்ஸை சீரிஸை கண்டு மகிழ்ந்தனர்.


ஏசியன் அகாடமி விருதுகள் அறிவிப்பு: சிறந்த ட்ராமா சீரிஸ் விருதை பெற்றது ‛ சுழல்’

முன்னதாக, இந்த சீரிஸ் வெளியான போது இத்தொடர் குறித்து பேசிய புஷ்கர் மற்றும் காயத்ரி, "பொழுதுபோக்கு என்பது மொழிக்கு அப்பாற்பட்டது என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். பார்வையாளர்கள், இன்று உலகம் முழுவதிலுமிருந்து நல்ல கதைகளைக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்.

அமேசானில் ஸ்ட்ரீமிங் ஆகும் சுழல் - தி வோர்டெக்ஸ் மூலம் நம் நாட்டின் சிறந்த உள்ளடக்கத்தை வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்லும் சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது. மேலும், IIFA போன்ற உலகளாவிய நிகழ்வில் இத்தொடரை வெளியிடும் வாய்ப்பைப் பெறுவது உண்மையிலேயே ஒரு கனவு நனவானது என்றே கூறலாம்.அமேசான் பிரைம் வீடியோவிற்கும், IIFA குழுவிற்கும் இந்த சம்மதத்துக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மர்மம் நிறைந்த இக்கதை பார்வையாளர்களை இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும்” என்றார்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)

இந்த சீரிஸை பாராட்டி நடிகர் தனுஷும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு செய்தார் என்பது குறிப்பிடதக்கது

 

தலைப்பு செய்திகள்

Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
TVS Raider 125: ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ரெய்டர் 125 பைக்கில் டாக்டர் டூம் எடிஷன் - 60KM மைலேஜ், புதுசா என்ன இருக்கு? விலை எப்படி
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Sabarivarman Murder : சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Embed widget