(Source: Poll of Polls)
2K Love Story First look: 2K கிட்ஸ் ரொமான்ஸ் சொல்லும் '2K லவ் ஸ்டோரி'... மீண்டும் லவ் மோடில் சுசீந்திரன்... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ
2K Love Story First look : இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் '2K லவ் ஸ்டோரி ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான சுசீந்திரன் 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று கொடுத்ததை அடுத்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா. ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு காதல் படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில் ரொமான்டிக் ஜானரில் சுசீந்திரன் இயக்கி வரும் திரைப்படம் '2k லவ் ஸ்டோரி'. இன்றைய காலகட்டத்து நவீன இளைஞர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் உருவாகி வருகிறது. வெட்டிங் போட்டோகிராஃபியில் ஈடுபட்டு இருக்கும் ஒரு இளைஞர்களின் குழுவில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் திரைக்கதை கோயம்புத்தூர் மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. 2K தலைமுறையினரின் காதல், நட்பு வாழ்க்கையை பிரதிபலிக்கும் இப்படம் நிச்சயம் பார்வையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
After 'Aadhalal Kaadhal Seiveer,' director Suseenthiran is back with a love story.”#2kLoveStory - First Look 👍@Dir_Susi @immancomposer @iamjagaveer @MeenakshiGovin2 @CityLightPics #2KLS#2KLoveStoryFirstLook pic.twitter.com/6lifnBabl3
— Prakash Mahadevan (@PrakashMahadev) August 2, 2024
"2K கிட்ஸ் லவ் ஸ்டோரி" படத்தில் புதுமுக நடிகர் ஜெகவீர் ஹீரோவாக நடிக்க மீனாட்சி கோவிந்தராஜன் ஹீரோயினாக நடிக்கிறார். பால சரவணன், ஜெயபிரகாஷ் வினோதினி, ஆண்டனி பாக்யராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இது சுசீந்திரன் - டி. இமான் கூட்டணியில் உருவாகும் 10வது படம்களும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது '2K லவ் ஸ்டோரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார்.