படம் பிடிக்கலனா ஃபோன் போட்டு திட்டுங்க...சூர்யா சேதுபதியின் ஃபீனிக்ஸ் பட தயாரிப்பாளர் சவால்!
விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நடித்துள்ள ஃபீனிக்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பல திரை பிரபலங்களும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டு பேசினர்.
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் பேசும்போது
"பத்திரிக்கையாளர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். தமிழகத்திலிருந்து சென்று ஹிந்தி, மலையாளம், கன்னடா என்று அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்கும் ஒரு கலைஞர் என்றால் அது அனல் அரசு அவர்கள் தான். அவருடைய இயக்கத்தில் உருவாகும் முதல் படம் பீனிக்ஸ். ஒரு தமிழராக இருந்து ஹிந்தியில் 18 படங்களில் வேலை செய்துள்ளார். அதில் சல்மான் கான் உடன் மட்டும் 7 படம். தளபதி விஜய் அவர்களுடன் 9 படம் பணிபுரிந்துள்ளார். ஒரு முழு ஆக்சன் படமாக பீனிக்ஸ் உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா ஒரு முழு ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி அவர்களின் வெற்றி பலருக்கும் ஒரு உந்துதலாக இருந்தது. விஜய் சேதுபதி அவர்களின் வெற்றியைப் பார்த்து 100 பேர் வந்தால், அவரின் மகனின் வெற்றியை பார்த்து 200 பேர் வருவார்கள். விஜய் சேதுபதி அடையாளம் என்றால், சூர்யா ஒரு குறியீடு. படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சினிமாவை நேசித்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றி கொடுங்கள்".
தயாரிப்பாளர் டி சிவா பேசும்போது
"அனைவருக்கும் வணக்கம். முழு படத்தையும் பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட முதல் 10 படங்களில் பீனிக்ஸ் நிச்சயம் இடம்பெறும். 100% நேர்த்தியாக அனல் அரசு இந்த படத்தை எடுத்துள்ளார். ஒரு சீட் எச் திரில்லராக படம் உருவாகியுள்ளது. இந்த படம் நான் சொல்வது உண்மையில்லை என்றால் படத்தின் ரிலீஸ்க்கு பிறகு எனக்கு போன் போட்டு திட்டுங்கள். படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான வேலையை செய்துள்ளனர். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குனருக்கான விருதை அனல் அரசு அவர்கள் நிச்சயம் பெறுவார். சூர்யா அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. தமிழ் சினிமாவின் டைகர் ஷெராபாக நிச்சயம் சூரியா வருவார். தமிழ் சினிமாவில் நான் அடிக்கடி பார்க்கும் படம் மகாராஜா. இனிமேல் நான் அடிக்கடி பார்க்கும் படமாக பீனிக்ஸ் இருக்கும். சாம் சிஎஸ் இந்த படத்திற்கு சிறப்பாக இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி அவர்கள் தமிழ் சினிமாவிற்கு நிறைய விஷயங்களை கொடுத்துள்ளார், தற்போது அவரது மகனையும் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நான் மிகவும் நேசிக்கும் மனிதர் விஜய் சேதுபதி அவர்கள். அவரை தாண்டி அவரது மகன் மிகப் பெரிய ஆளாக வருவார். அனைவரும் திரையரங்கில் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்".





















