மேலும் அறிய

Surya On Vanangaan Issue: வணங்கான் சர்ச்சை; ‘அண்ணனின் முடிவுக்கு மதிப்பளிக்கிறேன்’.. - பாலாவுக்கு சூர்யா பதில்..!

வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக பாலா நேற்று அறிக்கை வெளியிட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் சூர்யா. இவர் தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில்  ‘வணங்கான்’ என்ற படத்தில் வந்தார். இந்தப்படத்தின்  படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பில் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக  ‘வணங்கான்’ திரைப்படம் கைவிடப்படுவதாகவும் தகவல் வெளியானது. 

Surya On Vanangaan Issue: வணங்கான் சர்ச்சை;  ‘அண்ணனின் முடிவுக்கு மதிப்பளிக்கிறேன்’.. - பாலாவுக்கு சூர்யா பதில்..!

இந்த தகவல் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவரும், பாலாவும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு படப்பிடிப்பில் நாங்கள் விரைவில் இணைய இருக்கிறோம் என்று பதிவிட்டார். அதனைத்தொடர்ந்து பாலா வணங்கான் படத்தின் கதையை  புதியதாக மாற்றுவதாகவும், அவருக்கு உதவியாக அருவி படத்தை இயக்கிய அருண் புருஷோத்தமன் இணைந்திருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இந்த நிலையில், நேற்று பாலா தரப்பில் இருந்து அதிர்ச்சியளிக்கும் வகையில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், “ என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன் ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.  

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா, இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே 'வணங்காள்" திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு. நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் ” என இயக்குநர் பாலா அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

சூர்யா பதில்:

இந்த நிலையில் பாலாவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சூர்யாவின்  தயாரிப்பு நிறுவனமான  2டி என்டர்டெயின்மென்ட் சார்பில்  பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்தப்பதிவில் பாலாவின் அறிக்கையை பகிர்ந்து பாலா அண்ணாவின் உணர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளித்து சூர்யாவும் 2டி என்டர்டெயின்மென்ட்  நிறுவனமும், வணங்கான்-ல் இருந்து விலகிக்கொள்கிறோம். எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம். ” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget