மேலும் அறிய

Etharkkum Thunindhavan: ’எதற்கும் துணிந்தவன்!’ - மிரட்டும் சூர்யா 40 பர்ஸ்ட் லுக் டைட்டில்!

, சூர்யாவின் பிறந்தநாள் நாளை அவரது ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூர்யா40 திரைப்படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.இதனை இயக்குநர் பாண்டிராஜ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். படத்தில் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஒன்றாகச் சேர்த்து வெளியிடப்பட்டிருக்கிறது, சூர்யாவின் பிறந்தநாள் நாளை அவரது ரசிகர்களால் கொண்டாடப்படும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாண்டிராஜன்  இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா40. பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படத்தை தற்போது சூர்யா40 என்றே  அழைக்கின்றனர். இந்த படம் சூர்யாவின் 40 வது திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சூர்யா40 திரைப்படத்தில்  சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர். படம்  முன்னதாகவே முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிப்போனது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூர்யா 40 படத்தின் பெயர் மற்றும் அதன் ஃபஸ்ட்லுக் புகைப்படங்கள் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , ஜூலை 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு  முன்னோட்ட புகைப்படம் வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கிளிம்ஸ் வீடியோ ஒன்றுடன் அறிவித்திருந்தது.

இது ஒருபுறம் இருக்க வருகிற ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவில் பிறந்த நாளை  ரசிகர்கள் தற்போதே கொண்டாட துவங்கிவிட்டனர். வாடிவாசல் படக்குழுவினர் வெளியிட்டுள்ள காமன் டிபியும் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது . #SuriyaBdayCDPCarnival  என்ற பெயரில்  நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.  அந்த புகைப்படத்தில் ஆக்ரோஷத்துடன் தனது  பெயருடன் கூடிய ஏர் கலப்பையை இழுத்து வருகிறார் சூர்யா.

சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில்  மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘வாடிவாசல்’.  சமீபத்தில் இந்த  படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கின. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடும் விதமாக  படம் உருவாகி வருகிறது. மதுரை வட்டார வழக்குடன் , கிராமத்து இளைஞனாக  படத்தில் வலம் வருவாராம் சூர்யா. இந்த படத்தில் இடம்பெறும் மாடு பிடி காட்சிகளுக்காக சூர்யாவிற்கு சிறப்பு பயிற்சிகளும் கூட வழங்கப்பட்டுள்ளன. கலைப்புலி எஸ் தாணு  இந்த படத்தை தயாரித்து வருகிறார். ஃபஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் பதிவிட்ட தயாரிப்பாளர் “ நமது வரலாறு மற்றும் துணிச்சலைக் குறிக்கும் ஒரு சின்னத்துடன்  வாடிவாசல் படத்தின் போஸ்டரை வெளியிடுவதில்  நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன்” என குறிப்பிட்டுருந்தார். வாடிவாசல் திரைப்படம்  சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' என்னும்  நாவலை தழுவியே உருவாகி வருகிறது 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICEArvind Kejriwal :ஆண்களுக்கு FREE BUS! கெஜ்ரிவால் பக்கா ஸ்கெட்ச்! தலைவலியில் காங்கிரஸ் | Aam Aadmi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
Chennai Rain: சென்னையில் திடீரென பெய்த மழை: நாளை மழை இருக்குமா?
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
“பாஜகவுக்கே இந்த சட்டம் நல்லதல்ல; காரணம்...” - சட்டத்துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு! என்ன நடக்கிறது சென்னையில்? - பகீர் சிசிடிவி காட்சிகள்
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
பொங்கல் பண்டிகைக்கு பல கோடிக்கு மது விற்பனை; புள்ளிவிவரத்தை எடுத்துவிட்ட அன்புமணி
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
Delhi Election; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
டெல்லி தேர்தல் ; கெஜ்ரிவால் அறிவிப்பால் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஜாக்பாட்...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
குடையுடன் வெளியே போங்க.! 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
குடையுடன் வெளியே போங்க.! 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Embed widget