ஆர்ஜே, விஜே, கோமாளி, சர்வைவர்… விஜே பார்வதி பற்றி அறியப்படாத சில விஷயங்கள்!
அர்ஜுன் தொகுத்து வழங்க, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. அதில் இடம்பெறும் பார்வதியை பற்றி பலரும் அறியாத சில செய்திகள் இந்த தொகுப்பில்.
தற்போதைய நிலையில் முன்னணி நடிகர்கள் பலரும் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இதில் சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உயர்ந்துள்ள நிலையில், முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்தரையில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சியை மற்றொரு முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழில் வரவுள்ள சர்வைவர் நிகழ்ச்சியை முன்னணி நடிகரான அர்ஜூன் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்களுக்கு ஒரு வீட்டில் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும். இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கொடுக்கும் டாஸ்க்குளை செய்ய வேண்டும் என்பது விதி. ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சி 5வது சீசனை நெருங்கியுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே சர்வைவர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. யாரும் இல்லாத ஒரு தீவில் எவ்வித தொடர்பு சாதனங்களும் இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாத போட்டியாளர்கள் அந்த தீவிலிருந்து தப்பிக்க வேண்டும். இதற்கிடையே நிகழ்ச்சி தொகுப்பாளர் கொடுக்கும் டாஸ்க்குகளையும் செய்ய வேண்டும். பிக்பாஸ் போலவே 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி முதல் நாள் எபிசோடு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதில் கலந்துகொள்ளும் பதினாறு போட்டியாளர்களில் ஒருவர்தான் VJ பார்வதி, வீடியோ ஜாக்கியாக மாறிய நடிகை பார்வதியை பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகளைப் தெரிந்துகொள்வோம்.
பெருமைக்குரிய மதுரைப் பெண்
பார்வதி மதுரையைச் சேர்ந்தவர், மதுரையை வேராக கொண்டதில் பெருமைப்படுகிறார். வரலாற்று நகரத்தின் மீதான தனது அன்பை வெளிப்படுத்துவதில் அவர் பெரு மகிழ்ச்சி கொள்கிறார்.
பத்திரிகை மீதான காதல்
பத்திரிகை மற்றும் தொடர்பியலிலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் கல்லூரியிலும், கலோரி முடிந்தும் நிருபராக வேலை செய்தார்.
ரேடியோ ஜாக்கி
பார்வதி தனது துறையில் பெரிய இடத்தை அடைவதற்கு முன்பு சில ஆண்டுகள் மதுரையில் வானொலி ஜாக்கியாக பணியாற்றினார்.
டிவி ஆங்கர்
பார்வதி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான நளைய இயக்குனர் மற்றும் குக் வித் கோமாளி 2 ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக இருந்தார், இது அவருக்கு கொஞ்சம் வெளிச்சம் பெற்று தந்தது.
வெள்ளித்திரை அறிமுகம்
ஹிப் ஹாப் தமிழா, மாதுரி ஜெயின் மற்றும் பலர் நடிக்கும் சிவகுமாரின் சபதம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார் பார்வதி. தனது வரவிருக்கும் தமிழ் திரைப்படமான கருங்காப்பியம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.
ஓவியம் மற்றும் பயணத்தின் மீதான காதல்
பார்வதி ஒரு திறமையான ஓவியர். பயணம் செய்வதை விரும்பும் நபர். சர்வைவர் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கு கொள்ள அதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
சமூக ஊடக செல்வாக்கு
பார்வதி சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கும் நபர், அவருக்கு குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உள்ளனர். அடிக்கடி தனது லைவில் வந்து அவர்களுடன் உரையாடுவார்.