Survivor | முட்டிக்கொள்ளும் பார்வதி - ஸ்ருஷ்டி.. தொடக்கத்திலேயே சண்டை.. எதிர்பார்ப்பை எகிறவைக்கும் சர்வைவர் ப்ரோமா!
90 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பதினாறு போட்டியாளர்கள். இயற்கை வளம் சூழ்ந்திருக்கும் ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் விடப்படுவார்கள்.
பிக்பாஸ்’, ‘மாஸ்டர்செஃப்’ போன்று சர்வதேச ஏரியாக்களில் ஹிட் அடித்திருக்கும் ரியாலிட்டி தொடர்கள், தமிழில் ஏற்கெனவே வரத்தொடங்கிவிட்டன. அதன் சமீபத்திய வரவுதான் ‘சர்வைவர்’. பிக்பாஸ் என்பது வீட்டுக்குள் நிகழும் உளவியல் யுத்தம் என்றால் ‘சர்வைவர்’ என்பது காட்டுக்குள் நிகழும் யுத்தம் என்று சொல்லலாம். முன்னதில் மனவலிமை முக்கியம் என்றால் பின்னதில் மனவலிமையோடு உடல் வலிமையும் மிக முக்கியம். ‘சர்வைவர்’ தமிழ் ஒளிபரப்பு நேற்று முன் தினம் இரவு தொடங்கியது.
90 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பதினாறு போட்டியாளர்கள். இயற்கை வளம் சூழ்ந்திருக்கும் ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் விடப்படுவார்கள். மிக அடிப்படையான பொருட்கள் மட்டுமே அவர்களுக்கு தரப்படும். மற்றபடி சமையலுக்கான நெருப்பு முதல் பல விஷயங்களை காட்டுக்குள் அவர்கள் சம்பாதித்துக் கொள்ளவேண்டும். இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் புது ப்ரோமா வெளியாகியுள்ளது.
அதில், நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பார்வதியும் - ஸ்ருஷ்டி டாங்கேவும் வார்த்தைகளால் மோதிக்கொள்கின்றனர். கடற்கரைக்குள் ஓடிவரும் போது ஒருவர் விழுந்தது தொடர்பாக இருவருக்கான வாக்குவாதம் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியும் சண்டை, வாக்குவாதம் என பிக் பாஸ் போலத்தான் பயணிக்குமோ என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இரண்டு ட்ரைபுகளாக (Tribe) பிரிக்கப்படும் இரண்டு அணிகளுக்கு இடையில் போட்டிகள் நிகழும். இவற்றில் வெல்வதற்கேற்ப எக்ஸ்ட்ரா வசதிகள் கிடைக்கும். மேலும் போட்டியில் தொடர்வதற்கான, தங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான விஷயங்களை (immunity) அடைவார்கள். பிக்பாஸ் நாமினேஷன் போலவே இதிலும் Tribal Council-ல் ஒருவரை எதிர்த்து வாக்களிக்கும் சடங்கு உண்டு. இதில் பின்னடைவைச் சந்திப்பவர்கள் எலிமினேட் ஆவார்கள். இதுதான் அடிப்படை விதி. மற்றபடி இன்னபிற எக்ஸ்ட்ரா விதிகளும் உண்டு. தங்களுக்குள் சண்டையிட்டு அடித்துக் கொண்டால் போட்டியிலிருந்து அவர் உடனே விலக்கப்படுவது முதற்கொண்டு பல உள்விதிகள் இருக்கின்றன. கடைசிவரை தாக்குப்பிடித்து போட்டியை வெல்பவருக்கு ‘சர்வைவர்’ டைட்டிலோடு ஒரு கோடி ரூபாய் பரிசாகக் கிடைக்கும். ‘சர்வைவர்’ தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் அர்ஜூன் என்பது குறிப்பிடத்தக்கது
Yentha Chellathuku Support Panrathu-nu Teriyalaye.😶
— Zee Tamil (@ZeeTamil) September 14, 2021
SURVIVOR | Everyday 9.30 PM.#SurvivorTamil #Survivor #ZeeTamil #சர்வைவர் #ActionKingArjun @akarjunofficial pic.twitter.com/Q4dy8z7JJU
'சர்வைவர்’ நிகழ்ச்சியின் அடிப்படை வடிவமானது Charlie Parsons என்கிற பிரிட்டிஷ் தொலைக்காட்சி தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்டது. 1997-ல் ‘ராபின்சன்’ என்கிற தலைப்பில் ஸ்வீடன் தொலைக்காட்சியில்தான் இது முதன்முதலில் ஒளிபரப்பானது. இதன் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்க தொலைக்காட்சியில் ‘சர்வைவர்’ என்கிற பெயர் மாற்றத்துடன் 2000-ம் ஆண்டில் புதிய அவதாரம் எடுத்தது. இதுவரை 40 சீஸன்களைக் கடந்து பெருவாரியான வெற்றியைப் பெற்றிருக்கும் இந்த ரியாலிட்டி ஷோ, அமெரிக்க தொலைக்காட்சி வரலாற்றில் அதிக ரேட்டிங் மற்றும் அதிக லாபம் பெற்ற நிகழ்ச்சியாக சாதனை படைத்துள்ளது.