முதன் முதலில் சிக்ஸ் பேக் வச்சது சூர்யாவா? பெருமை பேசிய சிவகுமாரை பங்கம் பண்ணிய விஷால்!
தனது மகன் சூர்யா தான் முதல் முறையாக சிக்ஸ் பேக் வைத்தார் என்றும் நடிகர் சிவகுமார் கூறிய நிலையில் இப்போது விஷால் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களில் நடித்து பேரும், புகழும் பெற்றவர் நடிகர் சிவகுமார். அப்போதெல்லாம் சினிமாவில் சர்ச்சையில் சிக்காத சிவகுமார் இப்போது தனது பேச்சு மற்றும் செயலால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். இப்போது அப்படி ஒரு சம்பவத்திலும் சிவகுமார் ஈடுபட்டிருக்கிறார். தனது மூத்த மகன் சூர்யா தான் சினிமாவில் முதல் முறையாக சிக்ஸ் பேக் வைத்தவர் என்றும் மற்ற நடிகர்கள் எல்லாம் ஒன்னுமே இல்ல என்பது போல் பேசியது தான் தற்போதைய சர்ச்சைக்கு காரணம்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ரெட்ரோ. இந்தப் படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம், கருணாகரன், லப்பர் பந்து சுவாஸிகா, ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து ரெட்ரோ படத்தை தயாரித்துளளார்.

வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள கனிமா பாடல் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ரீல்ஸ் போடும் அளவிற்கு டிரெண்டானது. இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்வில் சிவகுமாரும் கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: சூர்யாவுக்கு முன்பு தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக்ஸ் வச்ச நடிகர் யாரும் இல்லை. கார்த்தி கூட பண்ணது கிடையாது. ஆனால், அந்த மாதிரி உடலை வறுத்தி நடிக்க வேண்டாம் என்று நான் எச்சரிக்கை செய்தேன். இந்த மாதிரியெல்லாம் சினிமாவிற்கு வந்து இப்போது 28 வருமாகிறது. இப்படியொரு மகத்தான நடிகராக சூர்யாவை உயர்த்தி இருக்கும், கார்த்தி சுப்புராஜ் உள்பட பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான் நடிகர் விஷால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். முதன் முதலில் சிக்ஸ் பேக் வச்சது நடிகர் தனுஷ் தான். அவர் தான் பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ் பேக் எல்லாம் வைத்தார். அதன் பிறகு நான் தான் 2008ல் ஒரு முறையும், 2012ல் மதகஜராஜா படத்திற்காக ஒரு முறையும் சிக்ஸ் பேக் வைத்தேன். அப்படியிருக்கும் போது அவர் இப்படி கூறியது ஒருவேளை மறதியால் கூட இருக்கலாம் என்று கூறி பங்கம் செய்யும் விதத்தில் பதிலடி கொடுத்துளளார்.





















