மேலும் அறிய

Jai Bhim |"சூரரைப் போற்று மாறா எப்படியோ அப்படித்தான் சந்துருவும்" - ’ஜெய் பீம்’ குறித்து மனம் திறந்த நடிகர் சூர்யா!

“சந்துரு சார் எடுத்துள்ள பெரும்பாலான மனித உரிமை வழக்குகளில் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அவர் மட்டுமல்ல மட்டுமல்ல, நம் நீதித்துறையில் எத்தனையோ பேர் இப்படிச் செய்திருக்கிறார்கள்.”

நடிகர் சூர்யா நடிப்பில் அவரது 2டி எண்டர்டெயிமெண்ட் தயாரிப்பில் ஞானவேல் இயக்கி உருவாகிவரும் படம் ’ஜெய்பீம்’. படத்தின் தலைப்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்திருந்த நிலையில் , சமீபத்தில் வெளியான டிரைலரும் கூடுதல் சுவாரஸ்யத்தை உண்டாக்கிவிட்டது. படம் குறித்து தெரிவித்த இயக்குநர் ஞானவேல் ராஜாவோ,  உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் சம்பவங்களை வேறு எந்த படமும் இவ்வளவு அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்காது.ஜெய் பீம் படம் அப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்றார். ஜெய் பீம் திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருப்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் சூர்யா, ஜெய் பீம் திரைப்படம் குறித்து மனம் திறந்துள்ளார். அதில் “ நம்மை சுற்றி எவ்வளவு சக்தி வாய்ந்த மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. ஒற்றை மனிதனாக இருந்து எப்படி இத்தனை அழகாக இடையூறுகளை  செய்ய முடிகிறது என்பதெல்லாம் எனக்கு மிகப்பெரிய கற்றல் அனுபவம் என்பேன். இதுபோன்ற மாற்றங்களை ஏற்படுத்தும் மனிதர்களால்தான் நம் சமூகத்தில் நல்ல விஷயங்கள் நடக்க தொடங்கும். ஒரே ஒரு தீர்ப்பின் மூலம் நீதிபதி சந்துருவால் (படத்தில் சூர்யா சந்துரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்) 25,000 பேருக்கு வேலை கொடுக்க முடிந்தது.என்பதை நினைவு கூர்ந்துள்ளார் சூர்யா. மேலும் நான் எத்தனையோ வித்தியாசமான திரைப்படங்களை செய்துள்ளேன் ஆனால் சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் எனக்கு மிகப்பெரிய கற்றல் அனுபவம் என தெரிவித்த சூர்யா  சூரரைப் போற்று படத்தில் மாறா எப்படியோ அப்படித்தான் சந்துருவும் என்கிறார்.

சிறந்த படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள்தான் சூர்யாவிற்கு திருப்தியை தருகிறதாம் தற்போது எடுக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் பான் - இந்தியா படமாக உருவாக்கப்படுகிறது அதேபோல , உலகம் முழுக்க  உள்ள மக்களை நமது படைப்பு சென்றடையும் என்பதால் கூடுதலாக முயற்சிக்கவும் , பிற மொழி படங்களில் நடிக்கவும் நமக்கான உந்து சக்தி கிடைக்கிறது என்கிறார் சூர்யா. வழக்கரிஞர் சந்துருவாக நடித்துள்ளீர்கள் அவரை பற்றி பகிந்துக்கொள்ளுங்கள் என கேட்டதற்கு ”, “சந்துரு சார் எடுத்துள்ள பெரும்பாலான மனித உரிமை வழக்குகளில் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அவர் மட்டுமல்ல மட்டுமல்ல, நம் நீதித்துறையில் எத்தனையோ பேர் இப்படிச் செய்திருக்கிறார்கள்.” என பெருமிதமாக தெரிவித்துள்ளார் சூர்யா. ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் 2 ஆம் தேதி , தீபாவளியை முன்னிட்டு அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK 1st Anniversary LIVE:  தொடங்கியது தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா! முழு நேரலை...
TVK 1st Anniversary LIVE: தொடங்கியது தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா! முழு நேரலை...
TVK 1st Anniversary: தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..‘கெட் அவுட்‘ கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..‘கெட் அவுட்‘ கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
ஆரம்பமே அதிரடி.. விஜயுடன் மேடையேறிய பிரசாந்த் கிஷோர்! தொடங்கியது தவெகவின் இரண்டாம் தொடக்க விழா
ஆரம்பமே அதிரடி.. விஜயுடன் மேடையேறிய பிரசாந்த் கிஷோர்! தொடங்கியது தவெகவின் இரண்டாம் தொடக்க விழா
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK 1st Anniversary LIVE:  தொடங்கியது தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா! முழு நேரலை...
TVK 1st Anniversary LIVE: தொடங்கியது தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா! முழு நேரலை...
TVK 1st Anniversary: தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..‘கெட் அவுட்‘ கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..‘கெட் அவுட்‘ கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
ஆரம்பமே அதிரடி.. விஜயுடன் மேடையேறிய பிரசாந்த் கிஷோர்! தொடங்கியது தவெகவின் இரண்டாம் தொடக்க விழா
ஆரம்பமே அதிரடி.. விஜயுடன் மேடையேறிய பிரசாந்த் கிஷோர்! தொடங்கியது தவெகவின் இரண்டாம் தொடக்க விழா
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Embed widget