Kanguva : கங்குவா ரிலீஸூக்கு தடையாக நிற்கும் அமரன்... தினுசு தினுசா பிரச்சன வருதே
கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் தலை தூக்கி வருகின்றன
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை ரூ 350 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் ப்ரோமோஷன்கள் நடைபெற்று உலகளவில் 11 ஆயிரம் திரைகளில் கங்குவா வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
அர்ஜூன் லால் என்பவரிடம் கங்குவா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ரூபாய் 20 கோடி கடன் பெற்றுள்ளது. அர்ஜூன் லால் தற்போது காலமாகிவிட்டார். இவர் திவாலானவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அர்ஜூன்லாலுக்கு ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இதுவரை ரூபாய் 20 கோடியை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் சொத்தாட்சியர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடன் தொகையான ரூபாய் 20 கோடியை வரும் 13ம் தேதி ( நாளைக்குள்) செலுத்தாவிட்டால் கங்குவா படத்தை வௌியிடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இது தவிர்த்து சென்னையில் கடும் மழைக்காலம் தொடங்க இருப்பதால் படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸின் வரத்து குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கங்குவா வெற்றிக்கு தடையாக அமரன்
இந்த பிரச்சனைகள் ஒருபக்கம் இருக்க கங்குவா படத்தின் வெற்றிக்கு மற்றொரு பெரிய சவாலாக நிற்கிறது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம். கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகிய அமரன் திரைப்படம் யாருமே எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றிபெற்றுள்ளது. உலகளவில் இதுவரை ரூ 250 கோடிக்கும் மேலாக அமரன் படம் வசூலித்துள்ளது. படம் வெளியாகி 28 நாட்களில் ஓடிடி தளத்தில் அமரன் திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் படத்திற்கு தொடர்ந்து இருந்து வரவேற்பு இருந்து வரும் காரணத்தினால் அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் இன்னும் ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்கு எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. கங்குவா திரைப்படம் உலகளவில் 2000 கோடி வசூலிக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் திட்டமிட்டு போட்டியே இல்லாத நவம்பர் 14 ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்தார்கள். ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் கங்குவா படத்திற்கு பெரிய தடையாக நிற்கிறது.