"கோமாவில் இருந்து மீண்டதும் என் மகன் சொன்ன முதல் வார்த்தை விஜய்..." விஜய் பற்றி நடிகர் நாசர்
"14 நாட்கள் கோமாவில் இருந்த என்னுடைய மகன் ஃபைசல் தெளிந்ததும் சொன்ன முதல் வார்த்தை விஜய் " - நடிகர் நாசர்
விபத்தில் சிக்கிய நாசர் மகன்
தமிழ் சினிமாவில் மூத்த நடிகரான நடிகர் நாசரின் மூத்த மகன் ஃபைசல் கடந்த 2014 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவருக்கு தீவிரமாக காயம் ஏற்பட்டு 14 நாட்கள் கோமாவில் இருந்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் நாசர் தனது மகன் குனமடைந்ததற்கு நடிகர் விஜய் முக்கிய காரணம் என தெரிவித்தார்
கோமாவில் இருந்து மீண்டதும் மகன் சொன்ன வார்த்தை
" என் மகன் ஒரு தீவிர விஜய் ரசிகன். என்னுடைய மகனாக இருந்துகொண்டு இப்படி பண்ணலாமா என நான் அவனை பலமுறை கேட்டிருக்கிறேன். இந்த வயதில் இதெல்லாம் இருப்பது தான் என அவன் என்னிடம் சொல்வான். என் மகன் தீவிர விஜய் ரசிகன் என்பது விஜய்க்கும் தெரியும். இருவரும் சில முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். விபத்தில் சிக்கி என் மகன் 14 நாட்கள் கோமாவில் இருந்தான் . சிங்கப்பூர் சென்று அவனுக்கு சிகிச்சை அளித்தோம். கோமாவில் இருந்து மீண்டதும் அவன் அம்மா , அப்பா என்று சொல்லவில்லை. அவன் சொன்ன முதல் வார்த்தை விஜய். அவனுக்கு விஜய் என்று ஒரு நண்பன் இருக்கிறான் அவனை தான் கேட்கிறான் என்று முதலில் நாங்கள் நினைத்தோம். அவனது நண்பன் விஜய்க்கு ஃபோன் செய்து வரவழைத்தோம். ஆனால் அவனைப் பார்த்து அவன் எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. என் மனைவி உளவியல் ஆலோசகர் என்பதால் அவர்தான் விஜயின் புகைப்படத்தை எடுத்து அவனுக்கு காட்டினார். விஜயின் ஃபோட்டோவைப் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது. பிறகு விஜயின் ஃபோட்டோவை அவனுக்கு அடிக்கடி காட்டினோம்.
என் மகனின் நிலை தெரிந்து விஜயே வந்து அவனை பார்ப்பதாக கூறினார். அதெல்லாம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லியும் அவர் வந்து அவனை சந்தித்தார். இருவரையும் பேசவிட்டு நாங்கள் வெளியே சென்றுவிடுவோம். ஒருமுறை இல்லை அவன் குணமடையும் வரை பலமுறை விஜய் அவனை வந்து பார்த்து பேசிவிட்டு சென்றார். மகன் கிட்டார் வாசிப்பான் என்று விஜய்க்கு தெரியும் அதனால் அவர் அவனுக்கு ஒரு உக்குலேலெ பரிசாக கொடுத்து நீ சரியாகி வரும்போது இதை வாசிப்பாய் என்று சொன்னார்"
After waking up from 14 days in coma the first name my son said was not Amma or Appa it was Vijay ♥️ - Nassar pic.twitter.com/TZO7BotWpU
— Vijay Fans Trends (@VijayFansTrends) December 29, 2024