Kanguva: ஒரே நாளில் 2.5 கோடி பார்வையாளர்கள்... கலக்கும் ‘கங்குவா’ கிளிம்ப்ஸ்... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் சூர்யா!
சூர்யாவின் பிறந்த நாளை ஒட்டி 'கங்குவா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அவரது 42ஆவது படமான கங்குவா இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்க, திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் கங்குவா படம், 10 மொழிகளில் உருவாகி வருகிறது. இதில் பல கெட் அப்களில் சூர்யா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சூர்யாவின் பிறந்த நாளை ஒட்டி கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. சரியாக 12.01க்கு வீடியோ வெளியிட்ட படக்குழு சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கொண்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியான கங்குவா கிளிம்ப்ஸ் ஒரே நாளில் 25 மில்லியன் பார்வையாளர்கள் அதாவது இரண்டரை கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
நலமா… కుశలమా… ಸೌಖ್ಯವಾ… സുഗമാ… क्या बात हैं… Wassup mate…#GlimpseOfKanguva https://t.co/itW89Vwnb3@directorsiva @ThisIsDSP @StudioGreen2
— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2023
வீடியோவில் போரிடும் சூர்யாவின் மிரட்டல் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளது. இந்த நிலையில் கங்குவா தொடர்ந்து டிரெண்டிங்கிலும் முதலிடத்தில் இருப்பதால் நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கங்குவா கிளிம்ப்ஸிற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு குறித்து டிவிட்டரில் பதிவிட்ட சூர்யா, “உங்களின் அன்பான வாழத்துகளுக்கும், கங்குவா கிளிம்ஸூக்கு கிடைத்த வரவேற்புக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார். Overwhelmed & humbled… will strive harder… thank you all for your kind wishes and the amazing response for #KanguvaGlimpse feeling blessed!! Special thanks to all my brothers and sisters for doing several welfare activities across the States. Heart-filled! ❤️🙏🏽
— Suriya Sivakumar (@Suriya_offl) July 24, 2023
மேலும், தன் பிறந்தநாளில் மாநிலம் முழுவதும் நலத்திட்ட பணிகளில் ஈடுபட்ட சகோதர, சகோதரிகளுக்கு நன்றி என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்தப் பதிவுக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் கவனமீர்த்து வருகிறது.