Sai Pallavi Gargi: சூர்யா ஜோதிகாவுடன் இணையும் சாய் பல்லவி.. ட்வீட்டில் அப்டேட் கொடுத்த சூர்யா..!
சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கிறார்.
சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கிறார்.
‘விராட பர்வம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை சாய் பல்லவி அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்தப்படத்திற்கு கார்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை சூர்யா ஜோதிகாவுக்கு சொந்தமான 2டி நிறுவனம் சக்தி ஃபிலிம் ஃபேக்ட்ரி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
Jo & I are glad to associate with team #Gargi Some characters just stay in our minds! New thoughts and writing must be celebrated!Hope you all like it!@Sai_Pallavi92 #Jyotika @prgautham83 #AishwaryaLekshmi #GovindVasantha @kaaliactor @SakthiFilmFctry @blacky_genie @2D_ENTPVTLTD pic.twitter.com/uWpGDmgpSp
— Suriya Sivakumar (@Suriya_offl) June 24, 2022
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் சூர்யா, “ நானும் ஜோவும் கார்கி குழுவுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். சில கதாபாத்திரங்கள் நமது மனதிலேயே நின்று விடும். புதிய சிந்தனைகள்,எழுத்துக்கள் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டும். உங்களுக்கு படம் பிடிக்கும் என்று நம்புகிறோம்” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்படத்த கெளதம் ராமசந்திரன் இயக்குகிறார். 96, சீதக்காதி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்தப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
பிரேமம் படம் மூலமாக மிகப் பெரிய அளவில் கவனத்தை பெற்ற சாய் பல்லவி, தொடர்ந்து களி, தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். அண்மையில் இவர் மற்றும் ராணா இணைந்து நடித்து வெளியான விராட பர்வம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய, “ என்னை பொருத்தவரை வன்முறை என்பது ஒரு தவறான விஷயம். நான் ஒரு நடுநிலையான குடும்பத்தில் பிறந்தவள்.
எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதெல்லாம் நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதுதான்.அதே சமயம் ஒடுக்கப்பட்டவர்கள் நிச்சயம் பாதுக்கப்பட வேண்டும். காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவது, மாடுகளை கொண்டு செல்லும் இஸ்லாமியரை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்துவது ஆகிய இரண்டுமே ஒன்றுதான்.
View this post on Instagram
இங்கு வலது சாரி சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள் இடது சாரி சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யார் சரி, யார் தவறு எனக்கு தெரியாது. நீங்கள் நல்ல மனிதராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் யார் சரியாக இருக்கிறார்கள் என்பது குறித்து கவலைப்படத்தேவையில்லை.” என்று பேசியிருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சாய் பல்லவி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியிருந்தார்.