Suriya Gifts Gold Coin: படக்குழுவுக்கு தங்க காசுகள் பரிசளித்த நடிகர் சூர்யா!
சூர்யா தன்னுடன் பணிபுரியும் இயக்குநர்கள் மற்றும் படக்குழுவுக்குத் தங்கக் காசுகள் உள்ளிட்ட பரிசுகளை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஜெய் பீம் படம் சமீபத்தில் வெளியாகி சமூகத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஒருபக்கம் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு சூர்யாவுக்கும், அவரது வீட்டுக்கும் அளிக்கப்பட்டது.
சூழல் இப்படி இருக்க இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துவந்தார். இவருக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை ப்ரியங்கா அருள் மோகன் நடிக்க சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு டி. இமான் இசை அமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்தான் எதற்கும் துணிந்தவனாக படமாகிறது என தகவல்களும் வெளியாகின. கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியவுடன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
இந்நிலையில் சூர்யா தன்னுடன் பணிபுரியும் இயக்குநர்கள் மற்றும் படக்குழுவுக்குத் தங்கக் காசுகள் உள்ளிட்ட பரிசுகளை வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் படக்குழுவினருக்கு சூர்யா தங்கக் காசுகளைப் பரிசளித்துள்ளார்.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அல்லது வரும் பொங்கல் பண்டிகைக்குப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு நிறைவடைந்ததால், வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் விரைவில் நடிக்க ஆரம்பிப்பார் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Jai Bhim Issue: இயக்குநர்கள் ஒகே.. சூர்யாவுக்காக வாய்திறக்காத ரீல் ஹீரோக்கள்.. கோலிவுட் சைலன்ஸ்!
"We stand with surya" : சூர்யாவுக்கு ஆதரவாக நிற்கும் இயக்குநர் ரஞ்சித்..
jaibhim | சூர்யா ரசிகர் மன்றம் கலைப்பு: பா.ம.கவில் இணைந்த ரசிகர்கள்!