மேலும் அறிய

jaibhim | சூர்யா ரசிகர் மன்றம் கலைப்பு: பா.ம.கவில் இணைந்த ரசிகர்கள்!

”வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்ற வார்த்தையை சொல்லவில்லை என்றால் அவர் தம்பி படமாக இருந்தாலும் , அப்பன் படமாக இருந்தாலும் திரையிடமாட்டோம்."

ஜோதிகா மற்றும் சூர்யாவின் 2டி எண்டர்டைன்மெண்ட்  தயாரிப்பில் சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது.  அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும்  அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் படத்தையும், படத்தில் பணியாற்றியவர்களையும் பாராட்டினர்.

இதற்கிடையே படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாகவும் , வில்லனாக வரும் போலிஸ் அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என வைக்கப்பட்டிருந்ததும் சர்ச்சையாக வெடித்தது.இதனையடுத்து காலண்டரில் உள்ள புகைப்படத்தை மாற்றி வெளியிட்டனர் படக்குழு. ஆனாலும் பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. கடலூர் மாவட்டத்தில் உள்ள சூர்யாவின் ரசிகர்கள் சூர்யா ரசிகர் மன்றத்தை கலைத்து, அவரது உருவ படத்தை எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர்களை இழிவுபடுத்துவதாக ஜெய் பீம் படத்தை எடுத்திருப்பதற்கு சூர்யா மற்றும் இயக்குநர் ஜானவேல்பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் சூர்யா ரசிகர்கள் பா.ம.க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அக்கட்சியில் இணைந்துள்ளனர். அதேபோல ஈரோடு மாவட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன் முன்னிலையில் சூர்யாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய திருமுருகன் ”வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்ற வார்த்தையை சொல்லவில்லை என்றால் அவர் தம்பி படமாக இருந்தாலும் , அப்பன் படமாக இருந்தாலும் ஈரோட்டில் திரையிடமாட்டோம். அப்படி ஒரு காட்சி திரையிடப்பட்டால் நான் வன்னியர் சங்க செயலாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன் ..6 மாதம் ஆனால் மறந்துவிடுவோம் என நினைக்க வேண்டாம் “ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், நடிகர் சூர்யா பதில் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

அதேபொல "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.தொடர்ந்து பேசிய அவர், “ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய சூர்யாவை இந்த பகுதியில் (மயிலாடுதுறையில்) நடமாடவிட மாட்டோம். இந்த பகுதியில் எந்த தியேட்டரிலும் அவரது படத்தை திரையிட விடமாட்டோம். இது தமிழ்நாட்டின் அனைத்து இடங்களில் நடைபெறும். இனி சூர்யா வான் மார்க்கமாகதான் தமிழ்நாட்டினுள் சுற்ற வேண்டும். தரை மார்க்கமாக போக முடியாது என்பதை எச்சரிக்கையாக சொல்லி கொள்கிறோம்”. பாமக மாவட்ட செயலாளரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
தொழில்துறையினருக்கு செம்ம நியூஸ்! இனி ஒரே நாளில் அப்ரூவல்.. தமிழக அரசு கொண்டுவந்த செம மாற்றம்!
தொழில்துறையினருக்கு செம்ம நியூஸ்! இனி ஒரே நாளில் அப்ரூவல்.. தமிழக அரசு கொண்டுவந்த செம மாற்றம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
Embed widget