Suriya 42: 2 வாரங்களில் டைட்டில் அறிவிப்பு.. மே மாதம் டீசர்... சூர்யா 42 அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!
முன்னதாக சூர்யா 42 படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
சூர்யா 42 படத்தில் டைட்டில் இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி இன்னும் இரண்டு வாரங்களில் வரும் என்றும், படத்தின் டீசர் வரும் மே மாதம் வரும் என்றும் தயாரிப்பாளர் கே.ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் அனைத்து மொழி டீசர்களும் மே மாதம் வெளியாகும் என்றும், இந்தப் படம் எவ்வளவு பெரிய படமாக உருவாகியுள்ளது, படம் குறித்த ஐடியாவை மக்களுக்குக் தரும் என்றும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
முன்னதாக சூர்யா 42 படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. யூவி க்ரியேஷன்ஸ் - ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா - சிறுத்தை சிவா முதன்முறையாக இணையும் படம் சூர்யா - 42.
பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வரும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.
1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறும் கதையாக இந்தப் படம் உருவாகும் நிலையில், வெண்காட்டார், முக்காட்டார், அரத்தர், மண்டாங்கர், பெருமனத்தார் உள்ளிட்ட 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரலாற்றுப் பின்னணியில் 3டி படமாக உருவாகி வரும் இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. மதன் கார்க்கி வசனம் எழுத தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
முன்னதாக இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் எண்ணூர் துறைமுகம், கேரளா, கோவா உள்பட பல இடங்களில் நடைபெற்றன. மேலும் சூர்யா 42 படப்பிடிப்பை வரும் ஏப்ரல் மாதத்தில் முடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம், அண்ணாத்த படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குநராக உருவெடுத்துள்ள சிறுத்தை சிவா, சூர்யா 42 படம் மூலம் வெற்றி வாய்ப்பைத் தக்கவைப்பாரா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.
இதனிடையே நடிகர் சூர்யா, இந்தப் படத்துக்கான நியூ லுக்கில் வலம் வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன.
சூர்யா 42 படத்தின் உரிமை 100 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இந்தி உரிமையை இந்தி தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடா கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பித்தக்கது.
மேலும் படிக்க: Sam Neill: நான் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருக்கிறேன் - ரத்தப் புற்றுநோயால் அவதிப்படும் ஜூராசிக் பார்க் நடிகர்.. கவலையில் ரசிகர்கள்!