மேலும் அறிய

உயிர் உங்களது தேவி...அகநக பாடல் ப்ரொமோஷன்... மாறி மாறி ட்வீட் செய்த ’வந்தியத்தேவன்’ கார்த்தி - ’குந்தவை’ த்ரிஷா!

சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ள இந்தப் பாடலின் பிஜிஎம் முதல் பாகத்திலேயே வெளியானது.

கல்கியின் பிரபலமான நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை மையமாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம், இரண்டு பாகங்களாக உருவானது. அதில் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி 500 கோடி வசூல் செய்தது.

இந்தப் பெரும் வெற்றியைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி கோலாகலமாக உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.  

உயிர் உங்களது தேவி...அகநக பாடல் ப்ரொமோஷன்... மாறி மாறி ட்வீட் செய்த ’வந்தியத்தேவன்’ கார்த்தி - ’குந்தவை’ த்ரிஷா!

மாலை வெளியாகும் அக நக பாடல் :

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் நிலையில் அவற்றின் அப்டேட் பற்றி அறிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'அக நக...' பாடலின் முழு வெர்ஷன் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ள இந்தப் பாடலின் பிஜிஎம் முதல் பாகத்திலேயே வெளியானது. இருப்பினும் இந்தப் பாடலின் முழு வெர்ஷன் இரண்டாம் பாகத்தில் தான் திரையிடப்படவுள்ளது. இந்த அறிவிப்பு குறித்த முன்னோட்டம் வெளியானதில் இருந்து மிகவும் ஆவலுடன் மாலை வெளியாக இருக்கும் அக நக பாடலுக்காக உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள்.

ட்விட்டர் கலந்துரையாடல் :

இந்நிலையில் இந்த சுவாரஸ்யத்தைக் கூட்டும் விதமாக நடிகர் கார்த்தி ட்விட்டர் மூலம் த்ரிஷாவை டேக் செய்து 'இளையபிராட்டி… ஹாய்' என முன்னதாக ட்வீட் செய்துள்ளார். அதற்கு திரிஷா 'என்ன வாணர்குல இளவரசே?' என ரீட்வீட் செய்திருந்தார். இப்படி ட்விட்டர் மூலம் தொடங்கியது இவர்களின் கலந்துரையாடல். மேலும்

கார்த்தி : 'தங்கள் தரிசனம் கிடைக்குமா 😍😍 ?'

த்ரிஷா : ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்.

கார்த்தி : கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?

த்ரிஷா : வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கப்போகிறீர்களா ?

கார்த்தி : ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி.  நான் பழையாறை வந்ததும் நாம் vibeஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்….

திரிஷா : வீரரே பாடல் எப்போதோ ready மாலை 6 மணி வரை காத்திருங்கள்” என தங்கள் கதாபாத்திரங்களாக மாறி ட்வீட் செய்து தங்கள் ஃபாலோயர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

உயிர் உங்களது தேவி...அகநக பாடல் ப்ரொமோஷன்... மாறி மாறி ட்வீட் செய்த ’வந்தியத்தேவன்’ கார்த்தி - ’குந்தவை’ த்ரிஷா!


வெளியான போஸ்டர் :

சில தினங்களுக்கு முன்னர் அக நக பாடல் வெளியிடப்படுவதை அறிவிக்கும் விதமாக கண்கள் கட்டப்பட்ட நிலையில் முட்டி போட்டு அமர்ந்து இருக்கும் கார்த்தி, கையில் கம்பீரமாக வாளுடன் த்ரிஷா இருவரும் நிற்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி பொன்னியின் செல்வன் ரசிகர்களை மகிழ்வித்தது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
ரூ.500 கோடி பட்ஜெட்.. இன்னும் விற்கப்படாத டாக்சிக் ஓடிடி உரிமைகள்? யாஷ் படத்திற்கு புதிய சிக்கல்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
அஜித்துடன் இணையும் ஷங்கர்? அடுத்த படத்திற்கு இப்படியொரு திட்டம்!
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
டாக்சிக் பட விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா..மீண்டும் தொடரும் விமர்சனங்கள்
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
Embed widget