மேலும் அறிய

அய்யய்யோ! தூக்கில் தொங்கிய கபாலி பட தயாரிப்பாளர் - என்னப்பா சொல்றீங்க?

ரஜினிகாந்தின் கபாலி படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர் கேபி செளத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் கே.பி.செளத்ரி. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர் இவரே ஆவார். மேலும், பவன் கல்யாணின் கப்பர்சிங் படம் மட்டுமின்றி தெலுங்கில் பிரபலமான சீதம்மா வகீட்லோ ஸ்ரீமல்லே செட்டு, அர்ஜுன் சுரவரம் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். 

தூக்கிட்டு தற்கொலை:

கேபி செளத்ரி கோவாவில் உள்ள சீயோலிம் என்ற பகுதியில் வசித்து வந்தார். வழக்கமாக அவர் காலையில் வெளியில் வரும் நேரத்தை கடந்தும் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாமலே இருந்தது. இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. 

அப்போது, கேபி செளத்ரி வீட்டின் உள்ளே தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

போதையால் சறுக்கிய வாழ்க்கை:

கேபி செளத்ரியின் முழுமையான பெயர் சங்கர கிருஷ்ணபிரசாத் செளத்ரி.  இவர் ஆந்திராவிஜ் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்து வந்த இவர் மீது கடந்த 2023ம் ஆண்டு போதைப் பொருள் வழக்கு ஒன்று பதிவானது. இந்த வழக்கின் அடிப்படையில் அவர் சைபர்பாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

இந்த கைதுக்கு பிறகு அவர் வாழ்க்கை தலைகீழாக மாறியது என்றே திரையுலகினர் கூறுகின்றனர். இந்த கைது காரணமாக அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினார். தொழில் ரீதியாக ஏராளமான நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டது. இதையடுத்து, அவர் தனது வாழ்வைப் புதியதாக தொடங்க கோவாவிற்கு சென்றார். 

தொழில் நஷ்டம்:

கோவாவில் புதியதாக கிளப் ஒன்றைத் தொடங்கினார். ஆனால், அந்த வியாபாரத்திலும் அவரால் பெரிதும் ஜொலிக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. கடன் தொல்லை, பண நெருக்கடி, வியாபாரத்தில் நஷ்டம் என தொடர் நெருக்கடியில் சிக்கிக் கொண்ட கேபி செளத்ரி கடும் மன உளைச்சலில் சில நாட்களாக காணப்பட்டார். 

இதையடுத்து, அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேபி செளத்ரியின் மரணத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது குடும்பத்தினர் பல்வஞ்சாவில் வசித்து வருகின்றனர். கேபி செளத்ரியின் பிரேதத்தை அவரது சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget