Lal Salaam Update: "நா வந்துட்டேன்னு சொல்லு..." மும்பை புறப்பட்ட சூப்பர்ஸ்டார்...! சூடுபிடிக்கும் லால் சலாம் படப்பிடிப்பு..!
லால் சலாம்(Lal Salaam) திரைப்பட படப்பிடிப்பிற்காக மும்பைக் கிளம்பி சென்றார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.முக்கியமான அப்டேட் ஒன்றை நாளை வெளியிட இருப்பதாக இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்பட பலரும் நடித்துவரும் திரைப்படம் லால் சலாம்(Lal Salaam). இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்(Rajinikanth) கெளரவ கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது நாளை இந்தப் படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை சென்ற ரஜினிகாந்த்:
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் படம் லால் சலாம். நடிகர் விஷால், விக்ராந்த் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள்.லால் சலாம் கிரிகெட்டை மையப் படுத்தியக் கதையாக உருவாகி வருகிறது.அண்மையில் இந்தப் படத்தில் முக்கியான கதாபாத்திரத்தின் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் கவனத்தைப் பெற்றது.
இந்தப் படத்தின் முதல்கட்டப் படபிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்திருந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தற்போது படபிடிப்பில் இணைந்துகொள்வதற்காக தானும் மும்பை கிளம்பி சென்றுள்ளார் ரஜினி. இந்த தகவலைத் தொடர்ந்து நாளை முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிடப்போவதாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலாக காத்திருக்கிறார்கள். அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தின் ஒரு சிறிய முன்னோட்டம் வெளியானதில் இருந்து ரஜினி ரசிகர்கள் இன்னும் வெளிவராத நிலையில் அவர்களுக்கு மற்றுமொரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.
ரஜினிகாந்த் மகள்:
தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் வழியாக ஐஷ்வர்யா லக்ஷ்மி இயக்குனராக அறிமுகமானார். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தப் ப்டம் ஐஷ்வர்யா லக்ஷ்மியின் மேல் பெரும் எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது.அடுத்ததாக 2015 ஆம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை திரைப்படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. ஆனால் இந்தப் படம் எதிர்பார்ர்த்த வெற்றியடையவில்லை. ஆனால் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடிகர் தனுஷ் நடித்துச் சென்ற காட்சி பயங்கர வைரலானது. புதுபேட்டை படத்தின் கொக்கிக் குமாரு கெரக்டராக தனுஷ் இந்தப் படத்தில் தோன்றினார். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐஷ்வர்யா இயக்கும் படம் லால் சலாம்.இந்தப் படத்தில் ரஜினி நடிக்கு காட்சி நிச்சயம் கடந்த முறைப் போலவே பயங்கரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் தற்போது இறுதிக்கட்ட வேலைகளில் உள்ளது.டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமன்னா, மோகன்லால்,ஜாக்கி ஷ்ராஃப்.யோகி பாபு,ரம்யா கிருஷ்ணன்,வினாயக் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.