மேலும் அறிய

Coolie: அடடே! ரஜினிகாந்துடன் நடிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் - சூப்பரான கூலி அப்டேட்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் பிரபல மலையாள நடிகர் சௌபின் சாஹிர் நடிக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இளம் நடிகர்களுக்கு சவால் அளிக்கும் விதமாக இன்றும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஜெயிலர் பட ப்ளாக்பஸ்டர் வெற்றியால் ரஜினிகாந்தும், ரஜினி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ள வேகத்தில் வேட்டையன், கூலி என அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளது.

கூலி படத்தில் சௌபின் சாகர்:

வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கூலி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

கூலி படத்தில் பிரபல மலையாள நடிகர் சௌபின் சாஹிர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்று தமிழிலும் வரவேற்பு பெற்ற படங்களான மஞ்சுமெல் பாய்ஸ், ரோமஞ்சம், வைரஸ், பிரேமம் போன்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற கோல்ட், சி.பி.ஐ. 5, இருள்,  ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன், கும்பலாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நடிகர் சௌபின் கூலி படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி:

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. கூலி படத்தில் ரஜினிகாந்தின் கெட்டப்பும் வரவேற்கும் விதத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், மகேந்திரன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: Madhavan : மாதவனின் அதிரடி வெயிட் லாஸ் சேலஞ்ச்... 21 நாட்களில் எப்படி இந்த மேஜிக் நடந்தது?

மேலும் படிக்க: HBD SJ Surya: கோலிவுட்டை மிரட்டும் ஜாக்கி பாண்டியன்! நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாவிற்கு இன்று பர்த்டே!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NTK - TVK Alliance? :  “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’  செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்!  ஷாக்கான திமுகவினர்
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்
Hydrogen Train:  வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Hydrogen Train: வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Sunitha Williams Return: சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!AR Rahman : ”முன்னாள் மனைவினு சொல்லாதீங்க” ஆடியோ வெளியிட்ட சாய்ராபானு! இணையும் ரஹ்மான் தம்பதி?OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK - TVK Alliance? :  “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
NTK - TVK Alliance? : “நீரடித்து நீர் விலகாது” சீமானை கூட்டணிக்கு அழைக்கிறாரா விஜய்..?
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’  செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்!  ஷாக்கான திமுகவினர்
’’என் விஸ்வாசம் EPS-க்கு தான்’’ செங்கோட்டையன் மெகா ட்விஸ்ட்! ஷாக்கான திமுகவினர்
Hydrogen Train:  வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Hydrogen Train: வருகிறது இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! தமிழ்நாட்டிலும் ஓடப்போகுது! எந்த வழித்தடம் தெரியுமா?
Sunitha Williams Return: சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் எப்போ பூமிக்கு வர்றாங்க தெரியுமா.? நேரலை செய்யும் நாசா...
Coolie Movie Update: சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்.. கூலி படத்தோட லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா.?
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு சூப்பரான நியூஸ்.. கூலி படத்தோட லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா.?
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
நடிகை கூட விஜய்..போராட்டம் திமுகவுக்கு எதிராக, ஆனால், விஜய்யை அடிமட்டமாக விமர்சித்த அண்ணாமலை
Bandhipur accident:செயலிழந்த பிரேக்.. தறிக்கெட்டு ஓடிய லாரி! அடுத்து நடந்தது என்ன?
Bandhipur accident:செயலிழந்த பிரேக்.. தறிக்கெட்டு ஓடிய லாரி! அடுத்து நடந்தது என்ன?
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
சீறிய அண்ணாமலை ”டாஸ்மாக் கடையில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ ஒட்டும் போராட்டம்”
Embed widget