மேலும் அறிய

Chandramukhi 2: புதிய கோணத்தில் என்னுடைய சந்திரமுகி... ராகவா லாரன்ஸ், பி.வாசுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், லக்‌ஷ்மி மேனன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

Chandramukhi2: சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பார்த்துவிட்டு வாசு மற்றும் ராகவா லான்ஸை ரஜினி பாராட்டியதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

2005ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த சந்திரமுகி படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. இதில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர், மாளவிகா எனப் பலர் நடித்துள்ளனர். படத்தில் ரஜினியை சந்திரமுகி பழிவாங்கும் த்ரில்லர் கதையும், காமெடி காட்சிகளும், பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரமுகி 2 கதையை பி.வாசு இயக்கியுள்ளார். 

இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், லக்‌ஷ்மி மேனன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்துள்ளார். முன்னதாக வெளியான படத்தின் டிரெய்லரும், பாடல்களும் ரசிகர்களிடையே டிரெண்டாகி வந்தன.

இரண்டாம் பாகத்தில் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளதால் பெரிதாக எதிர்பார்ப்பு இருந்தன. நேற்று படம் ரிலீசான நிலையில், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் வந்தன. குடும்பத்துடன் பார்க்கும் எண்டர்டெயிமெண்ட் படம் என்பதால் விடுமுறை நாட்களில் சந்திரமுகி 2 அதிக வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் சந்திரமுகி படத்தை ரஜினிகாந்த் பார்த்துவிட்டு, இயக்குநர் பி.வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. 

மிகப்பெரிய வெற்றி படமான தன்னுடைய 
சந்திரமுகிய.. புதிதாக, வேறு ஒரு கோண்டத்தில்
ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்குப் படமாக
சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர்
திரு.வாசு அவர்களுக்கும், அருமையாக நடித்திருக்கும்
தம்பி ராகவா லாரன்ஸ் அவர்களுக்கும் மற்றும்
படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.... என அறிக்கை மூலம் ரஜினி பாராட்டியதால் படக்குழு உற்சாகமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதேபோன்று நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரும் சந்திரமுகி 2 படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்கும் வகையில் வடிவேலுவின் காமெடி, ராகவா லாரன்ஸின் நடிப்பு, சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தின் பேய் அவதாரம் ஆகியவற்றால் 'சந்திரமுகி 2' படத்திற்கு  வரவேற்பு கிடைத்திருக்கிறது. படத்தில் ராகவா லாரன்ஸின் வேட்டையன் கதாபாத்திரத்திற்கும் ரசிகர்களிடம் ஆதரவு கிடைத்து வருகிறது. 

மேலும் படிக்க: Aranmanai 4: சுந்தர்.சி ரசிகர்களே ரெடியாகுங்க.. பொங்கல் ரேஸில் ‘அரண்மனை 4’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Salaar Part 1: கிறிஸ்துமஸை குறிவைத்த ‘சலார்’.. ஷாருக்கானுடன் நேரடியாக மோதும் பிரபாஸ்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget