மேலும் அறிய

அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அசோக் செல்வன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படம் அழகான காதல் கதையுடன் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.

‘அன்பில் அவன்’ படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இவர்களுடன் சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ஆர்.கே. செல்வா மேற்கொள்ள, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டனர். ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர். கார்த்திகேயன், ‘அன்பில் அவன்’ பெண்களின் கனவு, அதை அடைவதற்கான முயற்சிகள், போராட்டங்கள் மற்றும் சவால்களை காதலுடன் பேசும் திரைப்படம் என்று தெரிவித்தார். மேலும், அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் திரை இணைப்பு படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்றும் கூறினார்.

இதுகுறித்து பேசிய அசோக் செல்வன், இப்படத்தின் கதை புதிதானது அல்ல என்றாலும், அதன் திரைக்கதை மற்றும் திரையரங்க அனுபவம் வித்தியாசமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். படத்தில் பெண்கள் ரசிக்கக்கூடிய பல காட்சிகளுடன் மாஸ் தருணங்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ‘அன்பில் அவன்’ காதலுக்காக ஒருவன் எவ்வளவு தூரம் பயணிக்கிறான் என்பதை சொல்லும் கதை என்றும், காதல் புத்திசாலியை முட்டாளாக்கும்; சாதாரணமானவனை சாதனையாளராக்கும் என்ற கருத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அசோக் செல்வன் தெரிவித்தார்.

கோவிந்த் வசந்தாவின் இசை இப்படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என்றும், ‘96’ படத்தைப் போலவே இப்படத்தின் இசையும் பேசப்படும் என அசோக் செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
தொடங்கியது தனுஷ் தமிழரசன் பச்சமுத்து படம்..படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
Meesaya Murukku 2 Review: பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
பார்ட் 2-வில் ஆரா ஃபார்ம் செய்தாரா ஹிப்ஹாப் ஆதி? மீசைய முறுக்கு எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam:மருமகனை கண்டபடி திட்டிய மாமியார்.. கெட்டப்பை மாற்றிய மயில்வாகனன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
வாய்கிழிய வசனம் பேசிய சிஎம் விஜய் எங்கே? பள்ளி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை - சீறிய உதயநிதி
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
சென்னைக்கு மீண்டும் வெள்ள அபாயம்! முடியாத மழைநீர் வடிகால் பணிகள்- அன்புமணி எச்சரிக்கை
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
TVK-வின் அங்கீகாரத்தை Suspend செய்யுங்க.! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த பரபரப்பு கடிதம்- அலற வைக்கும் அதிமுக
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
ஜெம் வீரமணி வழக்கு - சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்த தமிழ்நாடு அரசு - சிக்கப்போவது யார்?
அலுவலகம் செல்ல பெஸ்ட்! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!
அலுவலகம் செல்ல பெஸ்ட்! பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் டாப் 5 ஸ்கூட்டர்கள்!
மாருதி பலேனோ vs ஹூண்டாய் ஐ20: மைலேஜ், அம்சங்கள், பட்ஜெட்- உங்களுக்கு ஏற்ற கார் எது?
மாருதி பலேனோ vs ஹூண்டாய் ஐ20: மைலேஜ், அம்சங்கள், பட்ஜெட்- உங்களுக்கு ஏற்ற கார் எது?
விஜயின் காவல்துறை யாரைக் காப்பாற்றப் பார்க்கிறது? பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை? திமுக கேள்வி
விஜயின் காவல்துறை யாரைக் காப்பாற்றப் பார்க்கிறது? பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை? திமுக கேள்வி
Embed widget