Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
டாடாவின் கனவு படைப்பான டாடா நேனோ கார் மின்சார வடிவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று டாடா. இந்திய சாலையை இவர்களின் கார்கள் ஆட்சி செய்கிறது என்றே கூறலாம். பட்ஜெட் விலை முதல் ஆடம்பர விலை வரை டாடா கார் உள்ளது.
மீண்டும் வருகிறது Tata Nano:
இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரிடமும் கார் இருக்க வேண்டும் என்ற கனவில் டாடா அறிமுகப்படுத்திய கார் Tata Nano. 1 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் இந்திய சந்தையில் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும், இந்தியர்களால் எப்போதும் மறக்க முடியாத இடத்தில் உள்ளது. தற்போது விற்பனையில் இந்த கார் இல்லாவிட்டாலும் இந்த கார் ஒரு மறக்க முடியாத கார் ஆகும்.
தற்போது, இந்தியாவில் மின்சார கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில், மின்சார கார் தயாரிப்பிலும் டாடா நிறுவனம் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்த சூழலில், தங்களது கனவு காரான Tata Nano காருக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க டாடா கருதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர்:
ஆனால், இந்த முறை இந்த Tata Nano காரை மின்சார வடிவில் அவர்கள் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இ்ந்த காரில் 17 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட Tata Nano கார் தோல்வி அடைந்ததற்கு காரணமாக இருந்த அனைத்து விஷயங்களையும் சரி செய்து இந்த காரை வெற்றிகரமான காராக இந்திய சந்தையில் விற்பனை செய்ய டாடா முடிவு செய்துள்ளது.
போட்டி:
டாடா ஏற்கனவே பட்ஜெட் விலை வாடிக்கையாளர்களை கவர்வதற்காக டியாகோ மின்சார வேரியண்ட் காரையும் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. Tata Nano காரின் மின்சார வேரியண்ட் அறிமுகமானால் டியாகோ காரின் மின்சார வேரியண்ட் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதிலும் டாடா உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால், இந்த இரண்டு கார்களுக்கும் இடையே விலை, சிறப்பம்சங்கள், மைலேஜ், வசதிகள் என பலவற்றிலும் வித்தியாசம் இருப்பதையும் டாடா உறுதி செய்ய உள்ளது. மறைந்த தொழில் ஜாம்பவான் டாடாவின் கனவு படைப்பான இந்த Tata Nano கார் தோல்வி அடைந்தாலும், அது மீண்டும் மின்சார வேரியண்டாக அறிமுகமாவது அவருக்கு சமர்ப்பணம் செய்வதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சிறப்புகள்:
அதேசமயம், டாடா நேனோ காரைப் போலவே வடிவத்தில் உள்ள மின்சார காரான எம்ஜி கோமட் மிகப்பெரிய வெற்றிகரமான காராக இந்திய சந்தையில் உள்ளது. அதன் தரம், சிறப்புகள், மைலேஜ் ஆகியவற்றிற்காக நகர்ப்புறங்களில் அந்த கார் ஒரு வெற்றிகரமான கார் ஆகும். Tata Nano மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டால் அந்த காரை காட்டிலும் வெற்றிகரமான காராக இருக்கும் வகையிலும் இந்த மின்சார Tata Nano கார் வடிவமைக்கப்பட உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















