மேலும் அறிய

Salaar Part 1: கிறிஸ்துமஸை குறிவைத்த ‘சலார்’.. ஷாருக்கானுடன் நேரடியாக மோதும் பிரபாஸ்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சலார் படத்தி ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் 1 & 2 பாகங்களை இயக்கி, கன்னட சினிமா பாக்ஸ் ஆஃபிஸை புரட்டிப்போட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இவர் இயக்கத்தில் அடுத்த படமாக பிரபாஸ் - ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ள ‘சலார்’ திரைப்படம் வெளிவரவிருக்கிறது. மலையாள ஸ்டார் பிருத்விராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள நிலையில், தெலுங்கு ஸ்டார் ஜெகபதி பாபு இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம், நேற்று (செப்.28) வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தில் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால் பெரிதும் அதிருப்தியடைந்த பிரபாஸ் ரசிகர்கள் எப்போது சலார் ரிலீசாகும் என எதிர்பார்த்து அப்டேட் கேட்டு காத்திருந்தனர்.

பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்நிலையில், பிரபாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 22ஆம் தேதி சலார் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரத்தம் தெறிக்க பிரபாஸ் இடம்பெற்றிருக்கும் போஸ்டரும் வெளியாகி வைரலாகி வருகிறது. 

கேஜிஎஃப் பாகங்களின் மூலம் இரண்டே படங்களில் மாஸ் மசாலா படங்களுக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்து குறிப்பிடத்தக்க கமர்ஷியர் இயக்குநராக பிரசாந்த் நீல் நிலையில் அவர் மீதான எதிர்பாப்பு இந்தப் படத்திலும் எகிறியுள்ளது. மேலும் பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான பான் இந்திய படங்கள் தோல்வியையே தழுவி வரும் நிலையில், பிரபாஸூக்கு பிரசாந்த் நீல் கைக்கொடுப்பார் என்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஷாருக்கானுடன் மோதும் பிரபாஸ்

நடிகர் ஷாருக்கான் - ராஜ்குமார் ஹிரானி இணைந்துள்ள டங்கி படம் வரும் டிச.22ஆம் வெளியாகும் என சமீபத்தில் தான் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வெளிவந்துள்ள சலார் பற்றிய அறிவிப்பு மேலும் பரபரப்பைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.

பதான், ஜவான் படங்களின் மூலம் இந்த ஆண்டு இரண்டு முறை ஆயிரம் கோடி வசூலைக் குவித்து ஷாருக்கான் மாஸ் மகாராஜாவாக இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் வலம்  வரும் நிலையில் பிரபாஸ் அவருடன் தற்போது நேருக்கு நேர் மோத உள்ளது எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.

மேலும் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் டிச.15ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில்,  மும்முனைப் போட்டியில் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget