மேலும் அறிய

சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் - டீசர் வெளியானது!

சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமான “தி பிளாக் பைபிள் (22:18)” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டீசர் வெளியானது.

தமிழ் சினிமா முழுக்க புதுவித திகில் கதைசொல்லும் வழக்கம் தற்போதைய டிரெண்ட் ஆக இருந்து வருகிறது. இந்த வரிசையில் தி பிளாக் பைபிள் (சப்டைட்டில்: 22:18), முற்றிலும் புது வகையான திரில்லர் அனுபவத்தை உறுதியளிக்கும் விதத்தில் உருவாகி உள்ளது. 

பேய் படங்கள் என்றாலே “பேய்-சந்திப்பு-பழிவாங்கும்” என அதிகமாகப் பயன்படுத்தப்படும் கதைக்களத்தை தவிர்த்து, அறிமுக இயக்குநர் மணிகண்டன் ராமலிங்கம் மர்மம், நாட்டுப்புற மரபு மற்றும் பயம் நிறைந்த ஒரு கதையை கொண்டு இந்த படத்தை இயக்கியுள்ளர்.

"சுழல் - தி வொர்டெக்ஸ்ட் என்ற இணைய தொடரில் தனது நடிப்பிற்காக மகத்தான வரவேற்பைப் பெற்ற எஃப்.ஜே. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாந்தினி தமிழரசன், ஸ்ரீஜா ரவி, மோனா பெத்ரா மற்றும் அய்ரா பாலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தின் டீசர், ஏற்கனவே சினிமா ஆர்வலர்கள் மற்றும் திகில் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ள அஸ்தினாபுரம் என்ற நிழல் கிராமத்தில் இந்தப் படத்தின் கதை நடக்கிறது. 

காலனித்துவ கால மாந்திரீகம் மற்றும் சூனியத்தால் நீண்ட காலமாக சபிக்கப்பட்ட ஒரு நிலத்தின் பிடியிலிருந்து தப்பிக்க துடிக்கும் இரண்டு பெண்கள் அலிஷா மற்றும் அவரது தாயாரைச் சுற்றி கதை சுழல்கிறது. ஆனால் அவர்கள் தப்பி ஓட முயற்சிக்கும்போது, அவர்கள் நினைத்ததை விட ஆழமான, ஆபத்தான ஒரு இடத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அலிஷாவின் காதலன் மட்டுமே அவர்களுடன் நிற்கும் நிலையில், மூவரும் அமைதிக்கு பின் இருக்கும் பயங்கரங்களையும், அதில் இருந்து தப்பிக்க மறுக்கும் சாபத்தையும் எதிர்கொள்ள வேண்டும்.

தி பிளாக் பைபிள் படத்தை அறிமுக இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை EPS பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு பாலா ஜி ராமசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, அஸ்வின் கிருஷ்ணா இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர், பாடல்கள் மற்றும் உலகளவில் திரையரங்க வெளியீட்டு தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது என்பது குறிபிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
Minister Nirmal Kumar: “குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
“குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம்: விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
OnePlus N6: அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
Embed widget